அன்பின் ஆவி!

"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2 தீமோத். 1:7).

சாத்தான் உங்களை பெலவீனப்படுத்த விரும்பி, பயத்தின் ஆவியைக் கொண்டு வருகிறான். அடிமைத்தனத்தின் ஆவியைக் கொண்டு வருகிறான். அவைகளையெல்லாம் முறியடிக்கும்படி, கர்த்தர் மூன்று வித அபிஷேகங்களைக் கொடுக்கிறார். 1. பெலத்தின் அபிஷேகம். 2. அன்பின் அபிஷேகம். 3. தெளிந்த புத்தியாகிய அபிஷேகம்.

மிகச் சிறந்தது தெய்வீக அன்பு, அதாவது, "அகாப்பே" அன்பு. "அன்பே, கல்வாரி அன்பே" என்று உள்ளம் உருகிப் பாடுகிறோம். உலகத்திலுள்ள அன்பை, நான்கு வகையாகப் பிரித்து சொல்லுவார்கள். முதலாவது, பெற்றோரின் அன்பு, இரண்டாவது, சிநேகிதர்களின் அன்பு, ஒரு நண்பன் தன்னுடைய நண்பனுக்காக ஜீவனைக்கூட கொடுக்க முற்படுவான். இந்த அன்பை, "பிலியோ" அன்பு என்று சொல்லுவார்கள். மூன்றாவது அன்பு, கணவனுக்கும், மனைவிக்குமிடையுள்ள அன்பு. அதை "ஈராஸ்" என்று அழைப்பார்கள். ஆனால், தெய்வீகத்தினுடைய அன்பு, வர்ணிக்க முடியாத, மகா மேன்மையான அன்பு. இதை "அகாப்பே" அன்பு என்பார்கள்.

பிதாவாகிய தேவன், தன்னுடைய சொந்த குமாரனென்றும் பாராமல், அவரைத் தந்தருளின அன்பு. குமாரனாகிய அன்பு, சிலுவையிலே தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும், தியாகமாக ஊற்றிக்கொடுத்த அன்பு. பரிசுத்த ஆவியானவருடைய அன்பு, ஆவியின் வரங்களை யும், ஆவியின் கனிகளையும், உன்னத பெலனையும், வல்லமையையும் கொடுக் கிற அன்பாகும். இந்த அன்பை நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியாது. அதை புரிந்துகொள்வதற்காகவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் நம்முடைய உள்ளத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது. "பிதா நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே, தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது (ரோம. 5:5).

நம்முடைய மூளை அறிவினாலோ, சுய முயற்சியினாலோ, தேவ அன்பை ஒரு போதும் அறிந்துகொள்ள முடியாது என்பதற்காகவே, தேவன், பரிசுத்த ஆவியானவரை நம்முடைய இருதயங்களில் ஊற்றியிருக்கிறார். அப். பவுலின் ஜெபம் என்ன? "கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்ன தென்று உணர்ந்து, அறிவுக் கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர் களாகவும், நீங்கள் விளங்க வெண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்" (எபேசி. 3:18,19).

தேவபிள்ளைகளே, தேவனிடத்திலே அன்பின் அபிஷேகத்தைக் கேளுங்கள். அந்த தெய்வீக அன்பு உங்கள் உள்ளத்தில் வரும்போது, உங்களுடைய சத்துருக்களை சிநேகிப்பீர்கள். உங்களை துன்பப் படுத்துகிறவர்களுக்காக, மன்றாடி ஜெபிப்பீர்கள். அக்கிரமக்காரரையும் நேசித்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவீர்கள். காட்டு மிருகங்கள்கூட, அன்புக்கு அடிபணியும். சத்துருக்களையும் சிநேகிதராக்கிவிட முடியும். உங்களுடைய வீடு, தெய்வீக அன்பினால் நிரம்பியிருக்கட்டும். வீட்டில் உள்ள ஒவ்வொருவருடைய உள்ளமும், அந்த பரலோக அன்பினால் நிரம்பியிருக்கும் போது, உங்கள் வீட்டிலே, தெய்வீகத்தின் பரிபூரணத்தை ஜனங்கள் காண்பார்கள்.

நினைவிற்கு:- "அன்பிலே பயமில்லை, பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது.