தீர்க்கதரிசன ஆவி!

"இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது" (வெளி. 19:10).

பலவிதமான கர்த்தருடைய ஆவிகளைக் குறித்து, தொடர்ந்து நாம் தியானித்துக் கொண்டே வருகிறோம். இதனால் உங்கள் வாழ்க்கை, ஆவிக்குரிய ரீதியிலே செழிப் படையப்போகிறது. பரிசுத்த வாழ்க்கை வாழவும், வெற்றியுள்ள ஜீவியம் செய்யவும், இந்த அபிஷேகம் உங்களுக்கு உதவியாயிருக்கிறது.

ஒருமுறை தன் கால்களிலே விழுந்த, அப். யோவானைப் பார்த்து தேவதூதன் சொன்னான்: "இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக் குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட, நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள், இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது," என்றான் (வெளி. 19:10).

கர்த்தர் மனுமக்களோடு பேசி, அவர்களை திருத்த, நல்வழிப்படுத்த, வரும் காரியங்களை அறிவிக்க பயன்படுத்தின ஒரு ஆவி, "தீர்க்கதரிசன ஆவி" யாகும். பழைய ஏற்பாட்டிலும் தீர்க்கதரிசனமிருந்தது. புதிய ஏற்பாட்டிலுள்ள ஐந்து வகை ஊழியக்காரர்களுக்குள், தீர்க்கதரிசிகள் இருந்தார்கள். விசுவாசிகள் விரும்பக்கூடிய மிகச் சிறந்த வரம் ஒன்று உண்டென்றால், அது தீர்க்கதரிசன வரம்தான். அப். பவுல் சொல்லுகிறார், "அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்" (1 கொரி. 14:1).

வேதம் முழுவதிலும் 46 தீர்க்கதரிசிகளை நீங்கள் காணலாம். இதில் ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல் போன்றவர்கள், பெரிய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்பட்டார்கள். ஏன் தெரியுமா? அவர்கள் நீண்ட காலம் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள். அதிகமான அளவு தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

வேதத்திலே ஏறக்குறைய பதிமூன்று பெண் தீர்க்கதரிசிகளுமிருந்தார்கள். அவர் கள், ராகேல், மிரியாம், நொவதியாள், தெபொராள், உல்தாள், ஏசாயாவின் மனைவி, மரியாள். அன்னாள், பிலிப்புவின் நான்கு குமாரத்திகள் என்பவர்கள். கிறிஸ்து வுக்குள் ஆணென்றுமில்லை. பெண்ணென்றுமில்லை. அதுபோல, தீர்க்கதரிசிகளில் ஆணென்றுமில்லை, பெண்ணென்றுமில்லை. கடைசி காலத்தில் மாம்சமான யாவர் மேலும், கர்த்தர் தம்முடைய ஆவியை ஊற்றும்போது, குமாரர்கள் மாத்திரமல்ல, குமாரத்திகளும், தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். ஊழியக்காரர்கள் மேலே மட்டுமல்ல, ஊழியக்காரிகளின்மேலும், அபிஷேகம் ஊற்றப்படும் (யோவேல் 2:28,29).

இன்றைக்கு கிறிஸ்தவ மார்க்கத்தில், ஏராளமான தீர்க்கதரிசிகள் எழும்பாத தினால், புற மதஸ்தர்களில், குறி சொல்லுகிற ஆவியையுடையவர்கள் எழும்பி யிருக்கிறார்கள். தீய ஆவிகள் உதவியைக் கொண்டு மந்திரங்களை ஓதுகிறார்கள். தேவ ஜனங்களை வழிநடத்தி, பாதாளத்தில் பங்கடையச் செய்கிறார்கள். தீர்க்க தரிசனவரம் இருக்கும்போது, ஜனங்களை எளிதாய் கர்த்தருக்கென்று ஆதாயப்படுத்தி, ஆலோசனைக் கொடுத்து நல்வழிப்படுத்தி, மறைபொருட்களை அறிவிக்கலாம்.

தேவபிள்ளைகளே, உங்களுக்காகவே கர்த்தர் தீர்க்கதரிசன வரத்தை வைத்திருக் கிறார். இன்றைக்கும், ஆண்டவருக்கு தீர்க்கதரிசிகள் தேவை. கர்த்தருக்கும், அழிந்து போகிற ஜனங்களுக்குமிடையே, பாலமாய் நிற்கும்படி, ராஜாக்களை எச்சரிக்கும்படி, தேசங்களை சீர்ப்படுத்தும்படி, கர்த்தருக்கு தீர்க்கதரிசிகள் தேவை. ஆகவே, இம்மாபெரும் தீர்க்கதரிசன வரத்தை, நீங்கள் விரும்பி வாஞ்சித்து, கர்த்தரி டத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்வீர்களாக.

நினைவிற்கு:- "கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்" (எண். 11:29).