பிதாவின் ஆவி!

"பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்" (மத். 10:20).

இயேசு கிறிஸ்து தன் சீஷர்களைப் பார்த்து, மிக அன்போடு சொன்ன ஆலோசனை யின் வார்த்தைகள்தான் இவைகள். "மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள், உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில், உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும், புறஜாதியாருக் கும் சாட்சியாக, என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டு போகப்படுவீர்கள்.

அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, எப்படி பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேச வேண்டு வது, அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். பேசுகிறவர்கள் நீங்களல்ல, பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்" (மத். 10:16-20).

இயேசுவின் சீஷர்கள், படிப்பறிவற்ற பேதமையானவர்கள்தான். எப்போதுமே கடல் என்றும், வலை என்றும், மீன் என்றும் பிரயாசப்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள். அவர்கள் படித்தவர்களல்ல. நாகரீகமுள்ளவர்களுமல்ல. பொதுவாக யூதேயா தேசத்தில், அறிவும், ஞானமுமுள்ள பரிசேயரும், சதுசேயரும், வேதபாரகருமிருந்தார்கள். அவர்களோடு எந்தவிதத்திலும், இயேசுவின் சீஷர்களை ஒப்பிட முடியாது. ஆனாலும், கர்த்தர் அவர்களைப் பார்த்து, "ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்பு கிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால் சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும், புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்" என்றார் (மத். 10:16).

மிக உயர்ந்த வேலைக்கு, மிகவும் படித்த, செல்வாக்குள்ள அநேகர் விண்ணப் பித்திருந்தார்கள். மிகவும் ஒரு ஏழையான கிறிஸ்தவரும், அதற்கு விண்ணப்பத்திருந் தார். நேர் முகத்தேர்வு மிக கடினமாயிருந்தது. இவரை விட மிக அதிகமாய் படித்தவர் களெல்லாம், நேர்முகத் தேர்விலே தடுமாறினார்கள். ஆனால் இவரோ, மத் 10:20-ஐ சார்ந்து கொண்டு, "பரிசுத்த ஆவியானவரே, எனக்கு போதிய ஞானமில்லை. எப்படி பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய கண்கள் உம்மையே நோக்கிப் பார்க்கிறது," என்று ஜெபித்தார். கர்த்தருடைய ஆவியானவர் அவரிடம், "மகனே, நீ மாடிக்கு ஏறிப்போகும்போது, எத்தனை படிகள் இருக்கிறது என்று எண்ணி சொல்" என்றார். இவர் மொத்தம் 22 படிகள் இருக்கிறது என்றறிந்தார்.

அவரிடம் கேட்ட முதல் கேள்வி "படியேறி வந்தாயே, எத்தனை படிகள் ஏறினாய்?" என்று கேட்டார்கள். கர்த்தருடைய ஆவியானவர் அவருக்கு துணை நின்றதினால், உடனே "22 படிகள்" என்று, சொன்னார். வேறு எந்த கேள்விகளும் அவரிடத்தில் கேட்கவில்லை. உடனே அவரை தேர்ந்தெடுத்து, பெரிய உத்தி யோகத்தை, அவருடைய கையில் கொடுத்தார்கள். அவர் கண்ணீரோடு, தேவனை ஸ்தோத்தரித்தார்.

தேவபிள்ளைகளே, பிதாவின் ஆவியானவரில் சார்ந்துகொள்ளுங்கள். அவர், மனிதருடைய உள்ளிந்திரியங்களை அறிந்திருக்கிறவர். மட்டுமல்லாமல், நீங்கள் நடக்க வேண்டிய வழிகளை, உங்களுக்குப் போதிக்கிறவர். உங்கள்மேல் தம்முடைய கண்ணை வைத்து, உங்களு7க்கு ஆலோசனை சொல்லுகிறவர். உங்களுடைய சுய ஞானத்தில் சார்ந்துகொள்ளாமல், பிதாவின் ஆவியானவரிலேயே நூற்றுக்குநூறு சார்ந்து கொள்ளுங்கள்.

நினைவிற்கு:- "தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவை கள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்" (சங். 139:17).