விண்ணப்பத்தின் ஆவி!

"நான் தாவீது குடும்பத்தாரின்மேலும், எருசலேம் குடிகளின்மேலும், கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்" (சகரி. 12:10).

கர்த்தர், உங்களுக்கு கிருபையாக கொடுக்கிற மிகப் பெரிய ஆசீர்வாதம், "விண்ணப்பத்தின் ஆவியாகும்." நீங்களாக, விண்ணப்பம் செய்வது வேறு. பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பி, அவரே உங்களுக்குள்ளிருந்து விண்ணப்பத்தை நடத்திச் செல்லுவது வேறு. அந்த ஜெபம், மகா வல்லமையுள்ளதாயிருக்கும். பிதாவாகிய தேவன், அதற்கு உடனடியாக பதிலளிப்பார் அல்லவா?

சரி, "விண்ணப்பம்" என்றால் என்ன? தாங்க முடியாத துரோகங்கள், மன வேதனைகளினிமித்தம், உள்ளத்திலிருந்து பீறிட்டு வரும் கண்ணீரின் ஜெபமே, "விண்ணப்பமாகும்." மற்றவர்கள், பொய்யான வார்த்தைகளைச் சொல்லி, உள்ளத்தை குத்தும்போது, நொறுங்கிப்போய், தேவ சமுகத்திலே விழும்போது, கர்த்தர் விண்ணப்பத்தின ஆவியை, உங்களுக்கு தந்தருளுகிறார்.

தாவீது, பாவத்திலே விழுந்து உள்ளம் குத்தப்பட்டபோது, கர்த்தர் என்னை மன்னிப்பாரா? அவ்வளவு கொடிய பாவம் செய்து விட்டேனே, கர்த்தரை துக்கப் படுத்தி விட்டேனே என்று, உள்ளம் தொய்ந்து கதறி, எழுதினார். தேவனுக் கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவி தான். தேவனே நொறுங்குண்டதும், நருங் குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்" (சங். 51:17).

பழைய ஏற்பாட்டில், விண்ணப்பம் என்பது, "வெள்ளைப்போள பிசினுக்கு" ஒப்பாயிருக்கிறது. வெள்ளைப்போள மரத்தை, கூரிய கத்தியால் குத்திக் கிழிக்கும் போது, அதிலிருந்து வெண்மையான நிறத்தில் பிசின் வடிகிறது. அந்தப் பிசின், கசப்பான சுவையுடையதாயிருந்தாலும் மென்மையானதாக, வாசனைப் பொருந்தி னதாக விளங்கும். அது, கந்தவர்க்கங்களில் ஒன்றாய் சேர்க்கப்பட்டு, கர்த்தருக்கு முன்பாக நறுமணம் கமழும்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம், பிள்ளையில்லாமல் தவித்த அன்னாளாகும். அவளுடைய சக்களத்தியான பெனின்னாள், அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். ஆகவே தேவனுடைய ஆலயத்துக்கு தேவ சமுகத்துக்கு அன்னாள் ஓடிப்போய், அங்கே கர்த்தருடைய பாதத்தில் மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள் (1 சாமு. 1:10).

அன்னாள் பிரதான ஆசாரியனான ஏலியிடம், "அப்படியல்ல, என் ஆண்டவனே! நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ, நான் திராட்சரசமாகிலும், மதுவாகிலும் குடிக்க வில்லை. நான், கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றி விட்டேன்" (1 சாமு. 1:13-15) என்றாள். தேவ பிள்ளைகளே, ஜெபிக்கும்போது உங்களோடகூட, ஆவியானவரையும் இணைத்துக் கொள்ளுங்கள். "உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல், உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம் பண்ணுங்கள் (யூதா. 1:20).

அப்போது என்ன நடக்கிறது? "அந்தப்படியே ஆவியானவரும், நமது பலவீனங் களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்ன தென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே, வாக்குக்கடங்காத பெரு மூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்" (ரோம. 8:26).

நினைவிற்கு:- "ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே, பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்" (ரோம. 8:27).