நிறைவாக்கும் தேவன்!

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி, உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள், மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி. 4:19).

இந்த உலகம், குறைவுள்ள ஒரு உலகம்தான். சிலருக்கு, சரீரத்திலே ஏதோ ஒரு குறை. சிலருக்கு போதிய ஞானமில்லாத குறை. சிலருக்கு வருமானம், சம்பளம் குறை. வேறு சிலருக்கு மனதில் ஆழமான குறைவுகள். சிலர், குறைவுகளை எண்ணி, எண்ணி சோர்ந்து போகிறார்கள். வேறு சிலரோ, கர்த்தரின் மகிமையின் ஐசுவரியத்தினால் தங்கள் குறைவுகளை, நிறைவாக்கிக் கொள்ளுகிறார்கள்.

நான் சிறுவனாயிருந்தபோது, ஒரு கொடிய விஷ ஜுரத்தால் பாதிக்கப்பட் டேன். மரணத் தருவாய்குள்ளானேன். என்னுடைய பெற்றோரும், அநேக ஊழியக் காரர்களும், எனக்காக ஜெபித்து உயிருக்காக போராடினபடியால், கர்த்தர் கிருபை யாய், இந்த உலகத்தில் வாழ, எனக்குக் கிருபை பாராட்டினார். இதனால், அந்த ஜுரத்துக்குப் பிறகு, என் கால்களில் போலியோ வந்தது. வளர, வளர, வலது கால் சூம்பிப்போனது.

இந்த குறைவோடு நடக்க முடியாமல், விளையாட முடியாமல், மனம் சோர்ந்து போனேன். ஒரு தாழ்வு மனப்பான்மை, என்னைப் பற்றிப் பிடித்தது. மகிழ்ச்சியை இழந்தேன். உற்சாகத்தை இழந்தேன். ஒரு பெரிய விளையாட்டு வீரனாகவோ, போலீஸ் அதிகாரியாகவோ, வர முடியவில்லையே, என்று எண்ணி, மனம் கலங்கினேன். வாழ்க்கை கசந்துபோய்விட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலே, கர்த்தர் என்னை சந்தித்தார். இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தந்தார். பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தந்தார். அவர் எனக்குள் வாசம்பண்ண வந்துவிட்டார் என்பதை உணர்ந்தபோது, என் தாழ்வு மனப்பான்மை, எங்கே மறைந்துபோனது, என்றே தெரியவில்லை.

முன்பு போல, என்னுடைய குறையை எண்ணியெண்ணி அழுதுகொண்டிராமல், கர்த்தருக்குள் எனக்குக் கிடைத்த மகிமையின் ஐசுவரியங்களை எண்ணி, களிகூர ஆரம்பித்தேன். தேவ அன்பு என்னை நெருக்கும்போது, எவ்வளவு கூட்டம் ஜனங்கள் என்னைப் பார்த்தாலும், அதை பொருட்படுத்தாமல், நடனமாடி களிகூர்ந்து ஆண்டவரைத் துதிப்பேன்.

கர்த்தருடைய மகிமையின் பிரசன்னத்திலிருப்பது, எத்தனை மகிழ்ச்சியானது! நான் ஊழியத்திற்கு வந்தபோது, உடனே எல்லாம் நிறைவாகிவிடவில்லை. பண கஷ்டம் வாட்டினது. பற்றாக்குறை என்னை நெருக்கினது. முழு நேர ஊழியத்தில், கர்த்தர் எனக்கு எவ்வளவு சம்பளம் அல்லது வருமானம் தருவார் என்று, அவருடைய கையை எதிர்பார்த்தேன்.

ஆனால் கர்த்தரோ, "நான் உனக்கு எவ்வளவு தரவேண்டுமென்று நீ விரும்பு கிறாயோ, முதலிலேயே அதில் தசமபாகமாக கொடுத்துவிடு. பின்பு, நான் அதை பத்து மடங்கு பெருக்கமாக்கி, உனக்குத் தருவேன்" என்று சொன்னார். கர்த்தர் உண்மையுள்ளவர்.

ஆகவே, அன்றையிலிருந்து, தேவ இரகசியத்தைக் கற்றுக்கொண்டேன். எதிலும் நான் குறைவுபட்டுப் போகாதபடி நிறைவாக்கினார். கர்த்தருக்குக் கொடுக்க கொடுக்க, கர்த்தர் உலகப்பிரகாரமாகவும் ஆசீர்வதித்தார். ஆவிக்குரியப் பிரகார மாகவும் ஆசீர்வதித்தார். அதன்பின் எனக்கு பற்றாக்குறை நேரிடவில்லை. நிறை வுள்ளவனாய், மன திருப்தியோடு, சந்தோஷத்தோடு வாழ கற்றுக் கொண்டேன்.

நினைவிற்கு:- "என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது" (சங். 23:5).