தேவ இரகசியம் வாசமாயிருக்கும்!

"இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்" (எபேசி. 3:3).

கிறிஸ்து உங்கள் இருதயத்தில் வாசமாயிருந்தால் (எபே. 3:17), கர்த்தருடைய இரகசியங்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அப். பவுல், தேவனுடைய இரகசியங் களின் உக்கிராணக்காரன் என்று அழைக்கப்பட்டார் (1 கொரி. 4:1). "புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன் பங்காளிகளுமாயிருக் கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்" (எபே. 3:3).

உங்களைச் சூழ, ஏராளம் இரகசியங்கள் இருக்கின்றன. சில குடும்ப இரகசியங்கள் இருக்கின்றன. தகப்பனுக்கும், பிள்ளைகளுக்குமிடையே, இரகசியங்கள் இருக் கின்றன. அரசியலில் பல இரகசியங்கள் இருக்கின்றன. இராணுவத்தினர், போலீஸ், தேச தலைவர்கள் தங்கள் இரகசியங்களை பாதுகாக்கிறார்கள். அதே நேரத்தில், மற்ற தேசத்திலுள்ள இராணுவ இரகசியங்களையும் அறிய முயற்சிக்கிறார்கள். அதுபோல, தேவ இரகசியங்களும் இருக்கின்றன. "மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்" (உபா. 29:29).

"இரகசியம்" என்றால், "வெளியாக்கப்படாத மறைபொருள்" என்பது அர்த்தம். எல்லோருக்கும் தெரிந்திருப்பது இரகசியமல்ல. ஒரு ஊழியர் சொன்னார்: "இரகசியத்துக்குள் மறைந்திருக்கும், மகா இரகசியம் என்ன? அதாவது நீங்கள் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்கிறீர்கள். கிறிஸ்து உங்களில் வாசம் செய்கிறார். இதை புரிந்துகொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளும், அவர் உங்களுக்குள்ளும் வாசம்பண்ணுவது எப்படி?" என்ற கேள்வி கேட்டு அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

அதற்குபின் அந்த ஊழியரே விளக்கினார். "தண்ணீர் நிறைந்த ஒரு பாட்டிலை எடுத்தார். பின்பு அதை தண்ணீர் நிறைந்த ஒரு கிணற்றுக்குள் வீசி எறிந்தார். இப்பொழுது நிலைமை என்ன? பாட்டிலுக்குள் தண்ணீர் இருக்கிறது. அந்த பாட்டில் கிணற்று தண்ணீருக்குள் இருக்கிறது. இதுதான் நீங்கள் கிறிஸ்துவிலும், கிறிஸ்து உங்களிலும் இருக்கிற இரகசியம்."

பாருங்கள்! பழைய ஏற்பாட்டில் தேவன் யூதா கோத்திரத்தை தமக்காக தெரிந்து கொண்டார் (சங். 78:68). நாம் யூதரல்ல. புறஜாதியார். நாம் இஸ்ரவேல் ஜனங்களின் ஸ்தானத்திலே அவர்களோடு உடன் சுதந்தரராகவும், ஒரே சரீரத்துக்குள்ளானவர் களாகவும், வாக்குத்தத்தங்கள் அனைத்துக்கும் உடன் பங்காளிகளுமாயும் இருக்கிறோம். "கிறிஸ்து நமக்குள், நாம் அவருக்குள்" என்ற இந்த சத்தியத்தினாலே இந்த பெரிய சிலாக்கியம் நமக்குக் கிடைக்கிறது.

இயேசுவை எப்பொழுது நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களோ, அப்பொழுது உங்களுக்குள்ளே கிறிஸ்து வருகிறார். இஸ்ரவேலரோடு இணைக்கப்படுகிறீர்கள். அதே நேரத்தில், கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிற அவ்வளவு விண்ணக ஆசீர்வாதங் களையும், நீங்கள் சுதந்தரித்துக்கொள்வீர்கள். ஆகவே கிறிஸ்து உங்கள் இருதயத் தில் வாசமாயிருக்க வேண்டியது மிக மிக அவசியம். அப்பொழுதுதான் உன்னதங் களுக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் நீங்கள் சுதந்தரிக்க முடியும்.

நினைவிற்கு:- "இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல முற்காலங் களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை" (எபே. 3:6).

Daily BreadJoshua Jebadurai