அதிகாலை ஜெபம்!

"தேவன் அதின் நடுவில் இருக்கிறார். அது அசையாது. அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்" (சங். 46:5).

"ஒரு அதிகாலை வேளையில், சில வேட்டை நாய்கள் மான்களை துரத்திக்கொண்டு ஓடும் சத்தத்தைக் கேட்டேன். அங்கே ஒரு அழகிய, புள்ளி மான்குட்டி ஓட முடியாமல், நான் தங்கியிருந்த இடத்தை சுற்றிலும் அமைத்திருந்த வேலியை தாண்டி, உள்ளே வந்தது. தன் தலையை என் கால்களுக்கு இடையே புதைத்துக் கொண்டது. உடனே அந்த குட்டியை என் தோள்மேல் தூக்கினேன். அதை துரத்தி வந்த நாய்களை விரட்டியடித்தேன். அவைகளின் கொடிய பற்களுக்கு தப்புவித்தேன். அந்த பெலவீனமான மான்குட்டி என் பெலனை சார்ந்திருக்கையில், எந்த வேட்டை நாய் அதை எப்படி பிடிக்க முடியும்?"

இந்த சம்பவத்தை நான் ஒரு புத்தகத்தில் வாசித்தபோது, என்னை நான் ஒரு மான்குட்டியாக எண்ணினேன். பலவீனனாகிய நான், கர்த்தருடைய பாதத்தில் அடைக்கலம் புகுகிற வரையிலும், அநேக அசுத்த ஆவிகளும், பிசாசுகளும் என்னை துரத்தி வந்தன. தீய சிந்தைகளும், இச்சைகளும் விரட்டின. "நிர்ப்பந்தமான மனிதன் நான்! யார் என்னை விடுதலையாக்குவார்?" என்று கதறினேன். கர்த்தருடைய பாதங்களிலே என் முகத்தை புதைத்தபோது, கர்த்தர் எனக்கு துணை நின்று, சத்துருவினுடைய கைகளுக்கு விடுதலையாக்கி காத்துக்கொண்டார்.

தூய அகஸ்டின் என்ற பக்தன், இவ்விதமாய் குறிப்பிட்டார். பலவித சோதனைகளாலும், போராட்டங்களாலும் என் ஆத்துமா இளைப்பாறுதலற்று கலங்கிக் கொண்டிருந்தது. கிறிஸ்துவின் பாதத்தண்டை வந்தபோது அருமையாய் இளைப்பாறினேன். –தூ டஞுச்ணூணா தீச்ண் ணூஞுண்ணாடூஞுண்ண், தணணாடிடூடூ டிணா ணூஞுண்ணாஞுஞீ ணிண ஒஞுண்தண். கர்த்தருடைய சமுகத்தில் இளைப்பாறுதலை நாடித்தேடின தாவீது, "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங். 42:1) என்றார்.

மான்கள் நீரோடையை வாஞ்சித்து கதறுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது, மான்களுக்கேற்படும் தாங்க முடியாத தாகம். இரண்டாவது, வனாந்தரத்திலுள்ள பயங்கரமான உஷ்ணம். மூன்றாவது, வேட்டை நாய்கள் துரத்துகிறதினால் உண்டான மரண பயம். நீரோடைக்குள் வந்துவிட்ட பிறகு வேட்டை நாய்கள் மோப்ப சக்தியால், மான்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாது. நீரோடை அவைகளுக்கு பாதுகாப்பான அடைக்கலமாகிவிடும்.

அதுபோல, தேவபிள்ளைகளே, பலவித பிரச்சனைகளும், போராட்டங்களும் துரத்தும்போது, கர்த்தருக்குள் வந்து இளைப்பாறக் கற்றுக்கொள்ள வேண்டும். தேவனை நோக்கி கதறி ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய சமுகத்தில் தான் ஆறுதலும், தேறுதலும் கிடைக்கும். ஆகவே தாவீது சொல்லுகிறார், "தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த் ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது" (சங். 63:1).

ஆரம்ப வசனத்தில் "அதிகாலையிலே தேவன் அதற்கு சாயம் செய்வார்" என்று வாசித்தோம். அதிகாலமே உம்மைத் தேடுகிறேன் என்றார் தாவீது. ஆகவே ஒரு நாள் முழுவதும் நீங்கள் வெற்றியோடும், பரிசுத்தத்தோடும் வாழுவதற்கு அதிகாலையில் ஆண்டவரைத் தேடுங்கள்.

நினைவிற்கு:- "என் மகிமையே விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்" (சங். 57:8).