விசுவாசமென்னும் கேடகம்!

"பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம், அவித்துப்போடத்தக்க தாய், எல்லாவற்றிற்கும் மேலாக, விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர் களாயும் நில்லுங்கள்" (எபேசி. 6:16).

எபேசியர் 6-ல் அப். பவுல், "தேவனுடைய ஏழு சர்வாயுதவர்க்கங்களைக்" குறித்து, எழுதுகிறார். நீங்கள் என்றைக்கு இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப் பட்டீர்களோ, அன்றைக்கே நீங்கள் ஒரு யுத்தக்களத்திலிருக்கிறீர்கள். சாத்தானும், பிசாசின் கூட்டங்களும் உங்களை எதிர்க்கின்றன. "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத் தின் அந்தகாரலோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவி களின் சேனைகளோடும், நமக்குப் போராட்டம் உண்டு" (எபேசி. 6:12).

ஆகவே, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபேசி. 6:13). "எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது" (2 கொரி. 10:4). உங்களது எல்லா யுத்தங்களிலும், "கிறிஸ்து" என்னும் இரட்சகரை, உங்களுடைய "விசுவாச கேடகமாக," பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அந்த கேடகமானவரைக் குறித்து அப். பவுல், "நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்" (2 தீமோத். 1:12). என்று முழங்கிச் சொன்னார். தேவபிள்ளைகளே, கர்த்தர்மேல் விசுவாசம் வையுங்கள். நம்பிக்கையோடு அவரை சார்ந்துகொள்ளுங்கள். "நம்முடைய விசுவாசமே, உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்" (1 யோவா. 5:4).

கல்வாரிச் சிலுவை, உங்களுக்கு மாபெரும் கேடகம். அங்கே நம்மேல் சாத்தான் எய்த, சகல அக்கினியாஸ்திரங்களையும் இயேசு முறித்துப்போட்டார். உங்களை நோக்கி சாத்தான் "சாபம்" என்கிற, அம்புகளைத் தொடுத்திருக்கலாம். சிலுவையிலே கர்த்தர் உங்களுக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் எல்லா சாபங்களுக்கும், உங்களை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் (கலா. 3:13).

சாத்தானைப் பார்த்து சவால் விட்டு சொல்லுங்கள். "சாத்தானே, உன் சூழ்ச்சியும், தந்திரமும் என்னிடத்தில் பலிக்காது" தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே" (2 சாமு. 22:3) என்று சொல்லி, ஆண்டவரைத் துதித்து, மகிமைப் படுத்துங்கள். நீங்கள் ஜெயம் பெறுவீர்கள்.

தேவபிள்ளைகளே, வேதத்தில் எத்தனையோ இடங்களில் கர்த்தர் கேடகமாய் இருக்கிறார் என்று சொல்லி, தாவீது தேவனை மகிமைப்படுத்தினார். அவர் சொன்னார், "தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர். கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்" (சங். 84:11). ஆகவே, ஒவ்வொருநாளும், உங்களை கல்வாரிச் சிலுவையாகிய கிறிஸ்துவின் கேடகத்துக்குள் மறைந்துகொள்ளுங்கள். அப்பொழுது பொல்லாங்கன் எய்யும், எந்த அக்கினியாஸ்திரமும் உங்களை தாக்கவே தாக்காது. கர்த்தருடைய நாமம், உங்களுக்கு ஒரு கேடகம். கர்த்தருடைய நீதி, உங்களுக்கு ஒரு கேடகம். கர்த்தருடைய அளவற்ற அன்பும், தயவும், உங்களுக்கு ஒரு கேடகம். ஆகவே, நீங்கள் அசைக்கப்படுவதில்லை.

நினைவிற்கு:- "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப் பான்" (நீதி.