புத்திர சுவிகார ஆவி!

"அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" (ரோம. 8:15).

  கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுகிற, அநேக ஆவியின் நிறைவுகளுண்டு. ஆவி யினால் வருகிற அபிஷேகங்களுண்டு. அதிலே முக்கியமாக கர்த்தர் உங்களை தம்முடைய புத்திரனாக ஏற்றுக்கொண்டதும், புத்திர சுவிகார ஆவியை உங்களுடைய இருதயத்திலே அருளியதும், எவ்வளவு பெரிய விசேஷம்! இதனால் சர்வ வல்லவரை, "அப்பா, பிதாவே" என்று கூப்பிட முடிகிறது.

  பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் புத்திரர், "கர்த்தருடைய சேஷ்ட புத்திரர்" என்று அழைக்கப்பட்டார்கள். அந்த இஸ்ரவேலரோடு, கர்த்தர் உடன்படிக்கை செய்திருந்தார். வாக்குத்தத்தங்கள் அவர்களுடையன. ஆராதனை முறைமை அவர் களுடையன. அவர்களோ, கர்த்தருக்கு சொந்த ஜனமாயிருந்தார்கள்.

  ஆனால், வருடங்கள் செல்ல செல்ல, அவர்கள் கர்த்தரை விட்டு விட்டு, அந்நிய தேவர்களைப் பின்பற்றினார்கள். விக்கிரக ஆராதனை செய்தார்கள். எல்லாவிதத்திலும் கர்த்தரை கோபப்படுத்தி, எரிச்சலுண்டாக்கினார்கள். ஆகவே, கர்த்தர் அவர்களை தள்ளி விட்டு, அந்நியரும், புறஜாதியாருமாயிருந்த நம்மைத் தெரிந்துகொண்டார். இஸ்ரவேலின் ஸ்தானத்திலே, உங்களுக்கு புத்திர சுவிகாரத்தைக் கொடுத்தார்.

  அப். பவுல் எழுதுகிறார், "நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி, நியாயப்  பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறை வேறினபோது, ஸ்திரீயினிடத்திற்பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழான வருமாகிய, தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்" (கலா. 4:4-6).

  சமீபத்தில், ஒரு சகோதரியின் வீட்டில் நான் தங்கியிருந்தேன். அவர்கள் சொன்னார் கள், "ஒரு ஆஸ்பத்திரியிலே, என்னுடைய தாயார் என்னை பெற்றெடுத்துவிட்டு, பிரசவத்திலே மரித்துப்போனார்கள். என்னை, உரிமை பாராட்ட எந்த தகப்பனும் இருந்ததில்லை. ஆகவே, அந்த டாக்டர்  பரிதாபப்பட்டு, தன்னுடைய வீட்டுக்கு என்னை எடுத்துக்கொண்டு போய் வளர்த்தார். அவருக்கு, ஏற்கெனவே நான்கு சொந்த பிள்ளைகளிருந்தார்கள்.

  அவர் மேஜையில் அந்த பிள்ளைகளோடு அமர்ந்து, சிரித்து மகிழ்ந்து சாப்பிடு வார். நானோ, அவர்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்தபின்பு, தரையிலே உட் கார்ந்து சாப்பிடுவேன். அவர்கள், உயர்ந்த பள்ளிக்கூடத்தில் படித்தார்கள். நானோ அரசாங்க பள்ளிக்கூடத்தில், சாதாரணமாய் படித்தேன். எனக்கும், அவர்களுக்கும் பெரிய வித்தியாசம். அவர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்கு சீரும், சிறப்புமாக திருமணம் வைத்தார்கள். எனக்கோ சாதாரணமாய் திருமணம் வைத்து, பாகுபாட்டை காண்பித்தார்கள், என்று துக்கத்தோடு அந்த சகோதரி சொன்னார்கள். ஆனாலும், கர்த்தர் திக்கற்றோரை கைவிடாத தேவன். அவர்களை நேசித்தார். நல்ல கணவனைக் கொடுத்தார். மன நிறைவை கட்டளையிட்டார்.

  நீங்கள் சுவிகார புத்திரராயிருப்பதினால், இரண்டாந்தரமான பிள்ளையில்லை. ஆகவே கைகளை உயர்த்தி, "நான் தேவனுடைய பிள்ளை. ராஜாதி ராஜாவினுடைய பிள்ளை. உன்னதமான தேவனுடைய சுதந்தரம்," என்று மகிழ்ச்சியோடு சொல்ல லாம். நீங்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால் நிரப்பப்பட்டவர்கள்.

நினைவிற்கு:- "அவருடையநாமத்தின்மேல்விசுவாசமுள்ளவர்களாய், அவரைஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும்தேவனுடையபிள்ளைகளாகும்படிஅவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார்" (யோவா. 1:12).