நான் உன்னோடேகூட இருந்து!

"பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை, உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும், கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து,  நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்" (யாத். 34:10).

கர்த்தர் உங்களோடு ஒரு உடன்படிக்கை செய்து, வாக்குத்தத்தத்தைக் கொடுக் கிறார். அது என்ன? இது நாள் வரையிலும், பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யக்கூடாத அதிசயங்களை நீங்கள் காண்பீர்கள். உங்களோடுள்ள ஜனங்கள் காண்பார்கள். எந்த ஜனங்கள், உங்களை அவமானப்படுத்தினார்களோ, வேதனைப் படுத்தினார்களோ, அவர்களுக்கு முன்பாக, நான் அற்புதங்களையும், அடையாளங் களையும் நடப்பிப்பேன். உன்னைக் கொண்டு, நான் பெரிய காரியங்களைச் செய்யப் போகிறேன். நீ வெட்கப்படமாட்டாய்.

"நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும், கீர்த்தி யிலும், மகிமையிலும், உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்" (உபா. 26:19). யோசேப்போடுகூட இருந்து, எகிப்தின் அரண்மனையிலே அவனை உயர்த்தி, சகோதரர்களும், தாயும், தகப்பனும் அவனை வணங்கும்படி கர்த்தர் செய்தார். அது போல மோசேக்கு வாக்களித்தார். கடைசி வரை, கர்த்தர் மோசேயோடுகூட இருந்தார். மோசேயைக்கொண்டு செய்த, பலத்த காரியங்களை ஜனங்கள் கண்டார்கள்.

ஆடுமேய்த்த தாவீதை உயர்த்தினார். அவர் மேலிருந்த அபிஷேகத்தை, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் கண்டார்கள். அவர்மேல் ராஜரீகம் இருந்தது. இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடினார். அதுபோல இன்றைக்கு கர்த்தர் வாக்களித்து, "நான் உன்னோடுகூட இருந்து செய்யப்போகிற மகிமையான காரியங்களை, ஜனங்கள் காண்பார்கள். உன் சொந்த பந்தம் அனைவர் மத்தியிலும், உனது தலையை உயர்த்தி, மேன்மைப்படுத்துவேன்" என்று சொல்லுகிறார்.  

இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற, மோசேயைப் போல கர்த்தரை நீங்கள் அதிகாலையில் தேட வேண்டும். கர்த்தர் சொன்னார்,  "விடியற்காலத்தில் நீ ஆயத்த மாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்" (யாத். 34:2). ஆம் தேவபிள்ளைகளே, உங்களை பயன்படுத்தும்படி, நீங்கள் தேவ சித்தத்தை அறிந்துகொள்ளும்படி, அதிகாலை தோறும் தேவ சமுகத் துக்கு வாருங்கள். காலைதோறும், கர்த்தருடைய கிருபை புதிதாயிருக்கிறது. காலை யில் ஆண்டவர், மன்னாவைப் பொழிகிறார்.

இயேசுகிறிஸ்து, அதிகாலையில் இருட்டோடே எழுந்து ஜெபித்தார். தேவ பிள்ளைகளே, அதிகாலையில் தேவனைத் தேடுவதற்கு, உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். முதல்நேரம், கர்த்தருடையது. "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்" (மத். 6:33). தேவன் அதிகாலை ஜெபத்தை விரும்புகிறார்.
மோசே அதிகாலையில் தேவனைத் தேடி, சீனாய் மலையிலே ஏறி, உச்சியிலே தேவ பிரசன்னத்திலே சென்று சேர்ந்தார். மலையில் ஏறுவது சாதாரண காரியமல்ல. "கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்" (யாத். 34:5).  அந்த அதிகாலை ஜெபத்தின் பலனாக, கர்த்தர் யாரிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை, மோசேயின் நடுவில் செய்தார். தேவபிள்ளைகளே, கர்த்தரை அதிகாலையில் தேடுங்கள்.

நினைவிற்கு:- "தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடு கிறேன்; வறண்டதும், விடாய்த்ததும், தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது" (சங். 63:1).