இருதயத்தில் சுத்தம்!

"இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார் கள்" (மத். 5:8).


ஆண்டவர் செய்த முதல் பிரசங்கத்தை, "மலைப்பிரசங்கம்" என்று தூய அகஸ்டின் அழைத்தார். திரளான ஜனங்களுக்குக் கேட்கும்படி, அவர் ஒரு மலையின் மேல் ஏறினார். மலையின் உச்சியில் ஏறும்போது,  அங்கு இனிமையான மெல்லிய பூங்காற்று வீசும். மகிமை மேகங்கள் வந்து இறங்கும். தேவனை நெருங்கியிருக் கிறோம் என்ற உணர்வு ஏற்படும்.


இயேசு, சீஷருக்கு தன்னை வெளிப்படுத்தும்படி, உயர்ந்த மலையாகிய மறுரூப மலைக்கு ஏறினார். அவர் பன்னிரண்டு சீஷர்களைத் தெரிந்தெடுக்க விரும்பின போது, உயர்ந்த மலையின் மேல் ஏறி, இரவெல்லாம் ஜெபம் பண்ணி, தேவன் தெரிந்துகொண்ட பன்னிரண்டு பேரை அழைத்தார் (லூக். 6:12,13). அவர் வழக்க மாய் ஜெபம்பண்ணுகிற இடம், ஒலிவமலையின் மேலுள்ள அருமையான தோட்டமாய் இருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடமும் கூட,  "கல்வாரி மலை" என்று அழைக்கப்படுகிறது.


இந்த மலைப்பிரசங்கத்தில், "யார் தேவனைத் தரிசிப்பார்கள்?" என்கிற தேவ இரகசியத்தை அவர் வெளிப்படுத்தினார். "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்  பாக்கிய வான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத். 5:8). பணமில்லாமல், படிப்பில்லாமல், எந்த நாகரீகமுமில்லாமலிருந்தாலும், பரிசுத்தம் இருதயத்திலிருந் தால் போதும். அவர்கள் நிச்சயமாய் தேவனை தரிசிக்க முடியும்.


ஆம், மலைப்பிரசங்கத்தில் ஆண்டவர் பாக்கியமுள்ள, பேர்பெற்ற, ஆசீர்வதிக் கக்கூடிய வழிமுறையை ஜனங்களுக்குப் போதித்தார். மலைப்பிரசங்கம், மூன்று அதிகாரங்களில் நிரம்பியிருக்கின்றன. மத்தேயு. 5-ம் அதிகாரம், மத்தேயு 6-ம் அதிகாரம், மத்தேயு 7-ம் அதிகாரம். உண்மையிலே, இயேசு பேசுகிறதுபோல, ஒருவனும், ஒருக்காலும் பேசினதில்லை (யோவா. 7:46).


ஒருமுறை இந்திரா காந்தி அவர்கள் சொன்னார்கள். என்னுடைய இளைய மகன் சஞ்ஜய்காந்தி, விமான விபத்திலே மரித்தபோது, கிறிஸ்துவின் இந்த மலைப்பிரசங்கத்தை வாசித்து, மிகவும் ஆறுதலடைந்தேன் என்றார்கள். காந்திஜி, "இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெறுவதற்கு இந்த மலைப்பிரசங்கமே எனக்கு உதவியாயிருந்தது. நான் துப்பாக்கி ஏந்தி,  இரத்தம் சிந்தி, சுதந்திரம் பெற விரும்பவில்லை. இயேசு சொன்னாரே, "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்" (மத். 5:5) என்ற வசனம், என்னைத் தொட்டது. ஆகவே, சத்தியாகிரகம், உண்ணாவிரதம் போன்றவற்றினால், இந்தியாவை சுதந்தரித்துக்கொண்டேன்" என்றார்.


ஆம், உலகத்தில் கோடிக்கணக்கான பேர் பிரசங்கம் பண்ணினாலும், மலைப் பிரசங்கத்துக்கு ஈடு இணை ஒன்றுமேயில்லை. அதைப் பின்பற்றின பேதுரு பிரசங் கம்பண்ணினபோது, முதல் பிரசங்கத்திலே மூவாயிரம்பேர் இரட்சிக்கப்பட்டார்கள். பிறகு ஐயாயிரம் பேர், பிறகு திரளான ஜனங்கள் என்று பட்டியல் போய் கொண் டேயிருந்தது.


பேதுரு படிப்பறிவில்லாதவர்தான். மீன் பிடிக்கும் தொழிலை செய்தவர்தான். ஆனால், அங்குள்ள உலகத்தையே அவர் அசைத்தார். அப்படியே கர்த்தர் உங்களை யும் பயன்படுத்துவார்.


நினைவிற்கு:- "எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப் படும்" (மத். 10:19).