நன்மையும், கிருபையும்!

"என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களா நிலைத்திருப்பேன்" (சங்.23:6).

உங்கள் வாழ்நாளெல்லாம் நன்மையும், கிருபையும் உங்களைத் தொடரும். வலது காலை எடுத்து வைக்கும்போது, நன்மை. இடது காலை எடுத்து வைக்கும்போது, கிருபை. என்றென்றும் நன்மையும், கிருபையும், உங்களை நிழல் போல தொடர்ந்து வருகிறது. ஒருமுறை, ஒரு தேவ ஊழியர் சோன்னார்: "நம் ஒவ்வொருவருக்கும், இரண்டு தேவதூதர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்தான், நமக்கு பிரதானமான தேவதூதர்கள்" என்றார். நான் ஆச்சரியத்தோடு, அவர் எந்த தேவதூதர்களை பற்றி சோல்லுகிறார் என்று கவனித்தேன். முடிவாக அவர் சோன்னார்: "ஒரு தேவ தூதனுடைய பெயர் நன்மை; அடுத்த தேவதூதனுடைய பெயர் கிருபை" என்றார். ஆம், ஜீவனுள்ள நாளெல்லாம், நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும்.

சிலரை சாபங்கள் தொடருகிறது; சிலரை பயங்கள் தொடருகிறது; சிலரை அசுத்த ஆவிகள் தொடருகிறது; சிலரை பாவங்கள் தொடருகிறது; கஷ்டங்களும், நஷ்டங்களும் தொடருகின்றன. ஆனால், தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களை, அவைகள் ஒருபோதும் தொடர முடியாது. நல்ல மேப்பன், உங்களுக்கு முன் சேல்லுவதினாலே, நன்மையும் கிருபையுமே உங்களைத் தொடரும்.

ஒருமுறை, யாக்கோபுக்கு தீங்கு சேயும்படி, அவருடைய மாமனாகிய லாபான் நிழல் போல பின் தொடர்ந்தான். ஆனால், கீலேயாத் மலையின் அருகே வந்ததும், கர்த்தர், லாபானுக்கு சோப்பனத்திலே தோன்றி: "நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு" என்றார் (ஆதி. 31:23,24).

முடிவாக, லாபான் யாக்கோபை சந்தித்தபோது சோன்னார்: "தீங்கு சேய நான் இந்தக் குவியலைக் கடந்து, உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலை யும் இந்தத் தூணையும் கடந்து, என்னிடத்துக்கு வராதபடிக்கும், இந்த குவியலும் சாட்சி, இந்த தூணும் சாட்சி" என்று உடன்படிக்கை சேது கொண்டார் (ஆதி. 31:52).

நீங்கள் சிலுவையண்டை வந்து நிற்கும்போது, தீங்கு சேய சாத்தான் தொடர முடியாது. ஏனென்றால், அங்கே சத்துருவின் தலையை நசுக்கி, கர்த்தர் ஜெயத்தைக் கொடுத்திருக்கிறாரே. உங்களுடைய பாவங்களையும், சாபங்களையும் முறித்திருக்கிறாரே. ஆகவே, நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும். எவ்வளவு நாட்கள், நன்மையும் கிருபையும் உங்களைத் தொடர்ந்து வரும்? தாவீது ராஜா, ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடரும் என்று சோல்லுகிறார். தேவனுடைய பக்தனாகிய மோசே, மனிதனுடைய ஆயுளைக் குறித்து சோல்லும்போது, ஆயுசு நாட்கள் எழுபது வருஷம் பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷம் என்று குறிப்பிடுகிறார் (சங். 90:10). உங்களுடைய ஆயுசு, கொஞ்சமாக இருந்தாலும்கூட, அதிலே பல வகையான வருத்தங்களும், பாடுகளும் இருந்தாலும் நன்மையும், கிருபையும் என்றென்றைக்கும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். காரணம், கர்த்தர் உங்களோடிருப்பதுதான். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை என்று, கர்த்தர் உங்களுக்கு வாக்களித்திருக்கிறாரே.

நினைவிற்கு:- "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள் ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்" (மத். 28:20).