மகிழ்ச்சியான சீயோன்!

"வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சி யுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்" (சங். 48:2).

கர்த்தர், உங்களை "சீயோன்" என்றும், "எருசலேம்" என்றும் அழைக்கிறார். சீயோன் எப்படியிருக்க வேண்டும்? அது வடிப்பமான ஸ்தானமும், சர்வ பூமியின் மகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும். நீங்கள் ராஜாதி ராஜாவின் பிள்ளைகளாக காணப் பட வேண்டும். தேவனுடைய மகிமையின் சாயலை, ஜனங்கள் உங்களில் காண வேண்டும். "ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா" உங்களுக்குள் இருக்கிறார் என்கிற நினைவு, உங்களுடைய முகத்தை மலரச் சேயட்டும். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் வாசம் சேகிறார் (கொலோ. 1:27). மகிமையின் ஆவியானவரும், உங்கள் மேல் தங்கியிருக்கிறாரே (1 பேது. 4:14).

ஒரு தேசத்தில், மிக அழகான கெம்பீரத் தோற்றமுடைய இளவரசன் இருந்தார். அவருக்கு பல இடங்களிலே, பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் யானைப் படை, குதிரைப்படை, காலாட்படைகள் சூழ, தேசத்தில் பவனி வந்து கொண்டிருக் கும்போது, தூரத்திலே கந்தல் உடையணிந்த ஒரு ஏழை பெண்ணைப் பார்த்து, "அவளை அழைத்துக்கொண்டு வாருங்கள். அவளே, என் பட்டத்து இளவரசியாய் இருப்பாள்" என்றார். ஒரே நிமிடத்தில், அவளுடைய வாழ்க்கை முழுவதுமா மாறியது.

அதுபோலத் தான், ராஜாதி ராஜாவின் கண்கள் ஒருநாள் நம்மை கண்டது. நம்மிலே என்ன மேன்மையைக் கண்டாரோ தெரியவில்லை. அவருடைய பிள்ளை களாக்கினார், சிநேகிதர்களாக்கினார், மணவாட்டியாக்கினார். அவருடைய சிங்காசனத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். உங்களுடைய சுபாவத்தை இயேசுவின் சுபாவத்தைப் போல மாற்றி, பூரண மகிமையுள்ளவர்களாக விளங்கும்படியாகவே, ஆவியானவர் உங்களுக்குள் வந்து வாசம்பண்ணுகிறார். உங்களை பரிசுத்தமடையச் சேது, மகிமையின்மேல் மகிமையடையச் சேய வைராக்கியமா இருக்கிறார்.

ஒருநாள், ஒரு ஆயக்காரனுடைய உள்ளத்திலே பாவ உணர்வு வந்தபோது, ஆலயத்துக்குத் தூரமா போய் நின்றுகொண்டு, தன் கண்களைகூட வானத் துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன்னுடைய மார்பிலே அடித்துக் கொண்டு, "பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று ஜெபித்தான். கர்த்தருடைய கண்கள், அவனை அன்போடு கண்டது. அவன் நீதிமானாக்கப்பட்டவனாய், மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றான்.

இனிமேல், நீங்கள் தூரத்தில் நின்றுகொண்டிருக்கக்கூடாது. அந்நியரும் பரதேசி களுமாயிருக்கக்கூடாது. கர்த்தருக்குள் ஒரே வீட்டாராயிருக்க வேண்டும். இன்றைக்கு உங்களை சீயோனாக, எருசலேமாக இருக்கும்படி ஒப்புக்கொடுங்கள். "எருசலேம்" என்றால், "சமாதானத்தின் நகரம்" என்று அர்த்தம். உலகம் கொடுக்கவும், எடுக்கவும் கூடாத தெவீக சமாதானத்தால் கர்த்தர் உங்களை நிரப்புவார். "சீயோன்" என்றால், "நீதியின் சூரியனையே பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள்" என்று அர்த்தம்.

தேவபிள்ளைகளே, இனிமேலும் நீங்கள் தூரம் திரிந்த சீயோனாயிருக்கக்கூடாது. கல்வாரி அன்பை நோக்கிப் பார்த்து, கர்த்தரண்டை திரும்பி வந்துவிடுங்கள். கர்த்தரையேப் பிரியப்படுத்தி, அவருடைய சேல்லப் பிள்ளைகளாக, வாழும்படி அர்ப்பணியுங்கள். கர்த்தர், உங்களை மகிழ்ச்சியான சீயோனாய் மாற்றுவார்.

நினைவிற்கு:- "தேவனிடத்தில் சேருங்கள்; அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்" (யாக். 4:8).