பரம தரிசனம்!

"...நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை" (அப். 26:19).

தேவபிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் பரம தரிசனம் தேவை. தேவனிடத்திலிருந்து வருகிற தெவீக தரிசனமும், தேவ சித்தத்தை அறிந்து சேயல்படுகிற தரிசனமும் நமக்கு அவசியம் தேவை.

உலக மக்கள் பூமிக்குரிய தரிசனங்களை முன்பாக வைக்கிறார்கள். அவர்களுக்கு படிப்பைக்குறித்த, வியாபாரத்தைக் குறித்த, பணம் சம்பாதிப்பதைக்குறித்த தரிசனம்தான் இருக்கிறது. ஆகவே இந்த ஆண்டு இவ்வளவு சம்பாதிக்க வேண்டுமென்ற குறிக்கோளை நியமித்து, அதைப் பெறும்படி அவர்கள் முன்னேறிச் செல்லுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு பரம தரிசனம் தேவை.

அப். பவுலுக்கு கர்த்தர் தரிசனம் கொடுத்து அழைத்தார். தமஸ்கு வீதியிலே தேவனுடைய பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தச் சேன்று கொண்டிருந்த அவர்மேல் தேவனுடைய வெளிச்சம் சடுதியா பிரகாசித்தது. அவர் கீழே விழுந்தார். அப்பொழுது கர்த்தர் தரிசனத்திலே அப். பவுல் தனக்காக சேய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்பதைக் குறித்தெல்லாம் தெளிவாப் போதித்தார். அது என்ன தரிசனம்? அந்த தரிசனத்தின் நோக்கம் என்ன?

கர்த்தர் சொன்னார், "நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்" (அப். 26:16). அப். பவுல் அந்த பரம தரிசனத்திற்கு உடனே கீழ்ப்படிந்தார். அந்த தரிசனத்தை நிறைவேற்ற எந்த பாடுகளையும் சகிக்க தயாரானார்.

தேவபிள்ளைகளே, உங்களுக்கு ஒரு தரிசனம் தேவை. உங்களை அழைத்த கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பதே அந்த தரிசனம். உங்களைப் பற்றிய தரிசனமும் உங்களுக்கு வேண்டும். நீங்கள் கிறிஸ்துவுக்குள் யார் என்பது குறித்தும் கிறிஸ்து உங்களுக்கு கொடுத்திருக்கிற அதிகாரம், ஆளுகை, வல்லமை என்ன என்பதைப் பற்றிய தரிசனமும் உங்களுக்கு அவசியம். மட்டுமல்ல, தேசத்தைக் குறித்த, இழந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்த, நித்தியத்தைக் குறித்த தரிசனம் உங்களுக்குத் தேவை. அப்போதுதான் உங்களால் முன்னேறிச் செல்ல முடியும்.

தரிசனம் என்பதற்கு திட்டவட்டமான குறிக்கோள் அல்லது தேவன் கொடுத்த மாபெரும் பணி என்று அர்த்தமாகும். எப்படியும் வாழலாம் என்று குறிக்கோள் இல்லாமல் மனம்போன போக்கில் வாழ்ந்து உங்கள் வாழ்க்கையை வீணாக்காதேயுங்கள்.

நீங்கள் தரிசனத்தோடு முன்னேற வேண்டும். உங்களுக்கு தரிசனம் கொடுப்பேன் என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறாரே. கர்த்தர் சொல்லுகிறார், "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கத்தரிசனஞ் சோல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்" (யோவேல் 2:28). தேவபிள்ளைகளே, தரிசனத்தோடு முன்னேறுங்கள்.

நினைவிற்கு:- "மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்" (அப். 7:2,3).