புதிய ஆரம்பம்!

"பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்றார்" (ஆதி. 9:1).

நோவாவின் வாழ்க்கையிலே, ஒரு புதிய ஆரம்பம் உண்டானது. பழையவை களெல்லாம் ஒழிந்துபோனது. பாவிகளும், துன்மார்க்கரும் ஜலப்பிரளயத்தினால் அழிந்து போனார்கள். நோவாவின் குடும்பத்தார் ஒரு உன்னத அனுபவத்திற்குள், அதாவது ‘அரராத்’ என்னும் மலையில் வந்து இறங்கினார்கள்.

''Noah Walk with God'' கர்த்தரோடு, நீங்களும் ஒரு புது ஆரம்பத்தில் வந்திருக்கிறீர்கள். நோவாவையும், அவருடைய குமாரரையும் ஆசீர்வதித்த ஆண்டவர், இன்றைக்கு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கிறார். "பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்" என்று நோவாவின் குடும்பத்தாரிடம் சோன்னவர், இன்றைக்கு சுவிசேஷத்தால் உலகத்தை நிரப்பும்படி, உங்களுக்கு ஆலோசனை சோல்லுகிறார்.

நோவா லாமேக்கின் மகன், மெத்தூசலாவின் பேரன். ஏனோக்கின் கொள்ளுப் பேரன். ஆதாமின் சந்ததியிலே, பத்தாவது தலைமுறையாக வந்தவர். அவருடைய மேன்மையெல்லாம், தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்ததிலே இருந்தது. ஆங்கிலத்திலே, என்று இருக்கிறது (ஆதி. 6:9). அப்படி யென்றால், நோவா தேவனோடு நடந்தார், உலாவினார், சஞ்சரித்தார், முகமுகமாகப் பேசினார் என்றெல்லாம் அர்த்தமாகும். தேவனுக்கும், உங்களுக்குமிடையே ஒரு ஆழமான உறவையும், ஐக்கியத்தையும், கர்த்தர் இந்த மாதத்திலே உங்களுக்குத் தந்தருளுவாராக!

சந்திர மண்டலத்திற்கு சேன்று வந்த விண்வெளி வீரரான, ‘ஈர்வின்’ என்பவர் சொன்னார்: "நான் சந்திரனிலே நடந்தேன் என்பது பெரிய காரியமல்ல. சந்திரனையும், சூரியனையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கின தேவன், என்னோடுகூட இந்த உலக வாழ்க்கையிலே நடந்து வருகிறார் என்பதை எண்ணும்போது, என்னுடைய உள்ளம் பரவசமடைகிறது" என்றார். கர்த்தர் உங்களோடுகூட நடக்கும்போது, உங்களுக்கு கவலையோ, பயமோ ஏற்படுவதில்லை. எல்லாவற்றையும், அவர் பார்த்துக்கொள்ளுவார்.

லாமேக்கு, தன் மகனுக்கு நோவா என்ற பெயரை வைத்தபோது, "கர்த்தர் சபித்த பூமியிலே, நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத் திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சோல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்" (ஆதி. 5:29). லாமேக்குக்கு தேற்றுகிற ஒரு நோவா இருந்ததுபோல, உங்களுக்குத் தேற்றுகிற பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். "என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளன்" என்று, இயேசு சோன்னார் (யோவான் 14:16). அவர், எப்படி உங்களைத் தேற்றுவார் தெரியுமா? "ஒருவனை அவன் தா தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்" (ஏசாயா 66:13).

இந்த புதிய மாதத்திலே கர்த்தர் உங்களுக்கு மிகுந்த ஆறுதலையும், தேறுதலையும் தந்தருளுவார். நீங்கள் கர்த்தரோடு நெருங்கி வாழ் வீர்களென்றால், கர்த்தரும் உங்களில் மனமகிழ்ச்சியாயிருந்து, உங்களை எல்லா விதத்திலும் தேற்றி, ஆற்றி ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- "கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்" (சங். 115:12).