சிநேகிதரைச் சம்பாதியுங்கள்!

"நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண் டாகும் படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங் கள்" (லூக். 16:9).

பரலோகத்தில் அனாதைபோல நிற்பவர்கள், "பூமியிலே பின்மாற்றத்துக்குப் போ, பரமபிதாவின் ஆஸ்தியை, சிற்றின்பங்களுக்கு விற்றுப்போட்டவர்கள்." பொதுவாக எல்லோருமே, கெட்டகுமாரனை, "மனந்திரும்பி வருகிற ஒரு பாவி" என்றுதான் எண்ணுவார்கள். ஆனால், அவன் தகப்பனோடு இருந்தவன். தகப்பனு டைய அன்பை ருசித்துவிட்டு, பின்வாங்கிப்போன பின்மாற்றக்காரன். தகப்பன், தன் இளையகுமாரனின் வேண்டுதலின்பேரில், தன்னுடைய ஆஸ்திகளையெல் லாம் பிரித்து, பங்கிட்டுக் கொடுத்தார். கெட்ட குமாரன் தனக்குக் கிடைத்த பங்கை வைத்து, தொழிலோ, வியாபாரமோ சேயவில்லை. சிற்றின்பங்களை அனுபவிக்க எண்ணி, வேசியிடம் போய் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

பின்பு, அவன் வறுமையின் காரணமாக, பன்றிமேக்கும் தொழிலில் ஈடுபட்டு கஷ்டபட்டபின்பு, தகப்பனுடைய வீட்டை நினைத்தானே தவிர, தகப்பனுடைய அன்பை அவன் நினைக்கவில்லை. தகப்பனுடைய வீட்டிலுள்ள போஜனம்தான் அவனை கவர்ந்தது. "என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போவேன்" (லூக். 15:17,18) என்று தீர்மானம் பண்ணினான்.ஆனாலும், தகப்பன் தன் பாசத்தால் மகனுக்கு எதிர்கொண்டுபோய், மகனுக்கு முத்தம் கொடுத்து, மோதிரத்தையும், கால்களுக்குப் பாதரட்சைகளையும், வஸ்திரத் தையும் அணிவித்தான்.

ஆனால் சுதந்தரத்தையோ, ஆஸ்தியையோ இனி அவனுக்குக் கொடுக்க முடியாது. மீதியிருக்கும் சோத்து, அனைத்தும் மூத்தகுமாரனுக்கே உரியதாகும்.தகப்பனும் மூத்த மகனைப் பார்த்து, "மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறா, எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது" என்று சோன்னார் (லூக். 15:31). அப்படியென்றால் என்ன அர்த்தம்? "உனக்குள்ள வீட்டையோ, சுதந்தரத்தையோ எடுத்து, இனி உன் சகோதரனுக்குக் கொடுக்கப் போவதில்லை" என்று அல்லவா அர்த்தம். இனி அந்த இளையகுமாரன், தன் சோந்த வீட்டிலே, தன் சோந்த கிராமத் திலே, ஒரு அனாதையைப் போல நிற்க வேண்டியதுதான்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கிறிஸ்துவினுடைய அன்பை விட்டு பின்வாங்கிப் போகும்போது, பரலோகத்தின் சுதந்தரங்களை இழந்துபோவீர்கள். பரலோக வாசஸ் தலங்களை இழந்து போவீர்கள். ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, உங்களை தகுதிப்படுத்திக்கொள்ளுங்கள் (கொலோ. 1:12). பூமியிலே பின்மாற்றத்திலே போ, துணிந்து பாவம் சேகிறவன், தன் சோந்த பரலோக வீட்டையும், பரலோக சுதந்தரங்களையும் அழித்துப் போடுகிறான். எந்த ஒரு மனிதன், தன் சரீரத்தை வேசித்தனத்தால் தீட்டுப்படுத்துகிறானோ, அவனுக்கு பரலோக சுதந்தரம் இல்லை. பரலோகத்திலே, அவன் அனாதை போல நிற்பான்.

தேவபிள்ளைகளே, நீங்கள் ஒன்று சேய வேண்டும். நீங்கள் மாளும்போது நித்தியமான வீடுகளில் உங்களை ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, இனி நீங்கள் பூமியிலே வாழுகிற காலங்களிலே, உங்களுடைய பணத்தினாலும், பொருளினாலும் சுவிசேஷ வேலை சேது, அதன்மூலம் ஆத்துமாக்களை சம்பாதிக்க வேண்டும்.

நினைவிற்கு:- "ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்" (நீதி. 11:30). 11