உன் கையிலிருக்கிறது என்ன?

"கர்த்தர் அவனை (மோசேயை) நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார்" (யாத். 4:2).

"உன் கையிலிருக்கிறது என்ன?" என்கிற கேள்வியோடு, கர்த்தர் மோசேயோடு இடைப்பட்டார். அப்பொழுது மோசேக்கு எண்பது வயது. வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்ட அவர், தன் மாமனாருடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். "உன் கையிலிருக்கிறது என்ன?" என்ற கேள்வி, மோசேயை சிந்திக்க வைத்தது. அவர் கையிலிருந்த அந்தக் கோலை, "வெறும் கோல்" என்று தான் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் அதை கீழே போட்டபோதுதான் தெரிந்தது, அது ஒரு "பயங்கரமான வலுசர்ப்பம்" என்று. அது, தன்னை கொத்திக் கொன்று விடுமோ என்று, மோசே பயந்து அதற்கு விலகியோடினார்.

அப்பொழுது கர்த்தர் மோசேயிடம்: "நீ பயப்படாதே. அதன் வாலைப் பிடி" என்றார். தேவபிள்ளைகளே, தலையை நசுக்க வேண்டியது, கர்த்தருடைய கடமை. வாலைப் பிடிக்க வேண்டியது, உங்களுடைய கடமை. மோசே அதன் வாலைப் பிடித்து தூக்கினபோது, மீண்டும் அது மோசேயினுடைய கோலாக அல்ல, தேவனு டைய கோலாக மாறினது. கர்த்தர் அந்தக் கோலை பயன்படுத்தி, எகிப்தியரை பத்து வாதைகளினால் வாதித்தார். அந்தக் கோலை சிவந்த சமுத்திரத்துக்கு நேராய் நீட்டியபோது, சிவந்த சமுத்திரம் இரண்டாய்ப் பிளந்து, இஸ்ரவேலருக்கு வழி கொடுத்தது. ரெவி தீமில், அந்தக் கோலை உயர்த்திப் பிடித்தபோது, யுத்தத்திற்கு வந்த அமலேக்கியர் முறியடிக்கப்பட்டார்கள்.

தேவபிள்ளைகளே, "உங்கள் கையிலிருக்கிறது என்ன?" உங்களுடைய சுய சித்தமா? பாவங்களா? தகாத உறவு முறைகளா? கோபமா? எரிச்சலா? அவற்றை கீழே போடுங்கள். இன்றைக்கு, உங்களுடைய கைகளிலே கர்த்தருடைய கோலாக, "வேதப் புத்தகத்தைக்" கொடுத்திருக்கிறார். "வாக்குத்தத்தங்களைக்" கொடுத்திருக் கிறார். நீங்கள் அதை கையிலே பிடித்துக்கொண்டு, பிரச்சனைகளுக்கு நேராய் நீட்டு வீர்களென்றால், கர்த்தர் அற்புதமான ஜெயத்தை உங்களுக்குத் தந்தருளுவார்

2 இராஜா. 4:1-7வரை வாசித்துப் பாருங்கள். ஒரு தீர்க்கதரிசியின் வீட்டில், ஒரு குடம் எண்ணெய் இருந்தது. கர்த்தர் அதை பயன்படுத்தி, அயல் வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் வாங்கின அநேகம் வேறும்பாத்திரங்களில் ஊற்ற, ஊற்ற, அந்த எண்ணெய் பெருகிக்கொண்டே வந்தது. அந்த எண்ணையை விற்று, கடனைத் தீர்த்து, கொண்டு மனைவியும், அவள் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணினார்கள். உங்களுக்குள்ளிருக்கிற எண்ணெய் என்ன? அது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம். இந்த அபிஷேக எண்ணெயை, இந்தியாவிலுள்ள 130 கோடி காலியான பாத்திரங்களில் ஊற்றினாலும், அவ்வளவு பேரையும் நிரப்பி, அவர்கள் கையில் செய்யக் கர்த்தர் கிருபையுள்ளவராயிருக்கிறார். செருபாபேலின் கையில், ஆலயத்தை கட்ட தூக்கு (சக. 4:10). பாதத்தில் பூசி மகிழ, மரியாளின் கையில் நளத (மாற்கு 14:3). தேவபிள்ளைகளே, "உங்களுடைய கையில் என்ன இருக்கிறது?" ஒருவேளை உங்களிடம் கடுகு அளவு விசுவாசமிருந்தாலும்கூட, அது மலைகளை பெயர்க்கும். உங்களுடைய தாலந்துகள், திறமைகள், ஆவியின் வரங்களெல்லாம் கர்த்தருடைய நாமத்தின் மகிமைக்காக பயன்படட்டும்.

நினைவிற்கு:- "கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது" (மத். 17:20).