உயர்ந்த அடைக்கலம்!

"என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்" (சங். 91:14).

கர்த்தருடைய அடைக்கலம் சாதாரண அடைக்கலம் அல்ல. அது, உயர்ந்த அடைக்கலம். "இயேசுவின் இரத்தமே" அந்த உயர்ந்த அடைக்கலம். அது, எந்த சாத்தானாலும் எட்டிப்பிடிக்க முடியாத அடைக்கலம். எந்த சங்கார தூதனாலும் உங்களைத் தொடவோ, அணுகவோ முடியாது. அவன் என்னதான், பாதாளத் திலிருந்து குதித்து, குதித்து, கர்த்தருடைய கரத்திலிருக்கிற உங்களை பறிக்க முயன்றாலும், அவனால் பறித்துக்கொள்ளவே முடியாது. "சீ, சீ இந்த பழம் புளிக் கும்" என்று ஏமாற்றத்தோடு சென்ற நரியைப்போல, அவன் திரும்பிப் போவான்.

கர்த்தர் உங்களை உயர்த்துகிறது மட்டுமல்ல, உள்ளங்கைகளில் வரைந்திருக் கிறார். நீங்கள், அவருடைய கரத்தில் முத்திரை மோதிரமாக விளங்குகிறீர்கள். உங்கள் படிப்போ, தாலந்தோ, திறமைகளோ, செல்வாக்கோ உங்களுக்கு அடைக் கலம் தரப்போவதில்லை. கர்த்தர் ஒருவரே, உங்களை உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து, பாதுகாக்கிறவர். உங்களுடைய எல்லா உயர்வும், மேன்மையும் அவருடைய கரத்திலிருக்கிறது.

சிலர் தங்களைத் தாங்களே உயர்த்திக்கொண்டு, மேலே வந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். இதற்காக, குறுக்கு வழிகளைத் தேடுகிறார்கள். ஒருவர், காலை இன்னொருவர் வாரிவிட்டு முன்னேற நினைக்கிறார்கள். கடைசியில், நிம்மதியை இழந்து, கோர்ட் என்றும், போலீஸ் என்றும் வக்கீல்கள் பின்னால் அலைந்து திரிகிறார்கள். "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்" (நீதி. 10:22).

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை கர்த்தர் உயர்த்தி, இஸ்ரவேலின் ராஜாவாய் அபிஷேகம்பண்ணவில்லையா? தாவீதுக்கு, தன் தேசத்திலும், வெளி யிலும் ஏராளமான எதிரிகள், ஏராளமான யுத்தம் செய்ய வேண்டியதிருந்தது. அந்த வேளைகளிலெல்லாம், கர்த்தர் தாவீதை திடப்படுத்தி உயர்ந்த அடைக்கலத்தில் வைத்து பாதுகாக்கவில்லையா? தாவீதின் தேவன், உங்களுடைய தேவனாயிருக் கிறார். அவர், உங்களை தமது உயர்ந்த அடைக்கலத்தில் வைத்திருக்கிறார்.

நீங்கள் இரட்சிக்கப்படும்போது, உயர்ந்த நிலைமைக்கு வந்துவிடுகிறீர்கள். ராஜாதி ராஜாவுடைய பிள்ளைகள் என்ற அந்தஸ்தை, கர்த்தர் உங்களுக்குக் கொடுக் கிறார். இரட்சிப்பின் பேழையில் வைத்து, பாதுகாக்கிறார். உயர்த்துகிறார். தேவனால் இரட்சிக்கப்பட்ட தேவஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?

உலகத்தில் மகா பெரிய ஜலப்பிரளயம் வந்து, ஜனங்களையும், மிருக ஜீவன்களை யும் அழித்தபோது, கர்த்தர் நீதிமானாகிய நோவாவையும், அவருடைய குடும்பத் தையும், தமது உயர்ந்த அடைக்கலமான பேழையில் வைத்து பாதுகாத்தார். அந்தப் பேழைக்கு உள்ளும், புறம்பும் இயேசுவின் இரத்தத்துக்கு அடையாளமான கீல் பூசப்பட்டபடியினால், ஒரு துளி தண்ணீர்கூட உள்ளே போக முடியவில்லை. அந்தப் பேழை, அரராத் மலை உச்சியிலே போய் நின்றது. தேவபிள்ளைகளே, மலையளவு நோவாவை உயர்த்தினவர், உயர்ந்த ஸ்தானத்தில் கொண்டுபோய் வைத்தவர், உங்களையும் உயர்த்தமாட்டாரோ?

நினைவிற்கு:- "என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்" (சங். 61:2).