சபைக்குள்ளாக!

"இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?" (சங். 133:1).

"சபை" என்பது, கர்த்தருடைய குடும்பம். அங்கே உங்கள் மூத்த சகோதரனாகிய இயேசுகிறிஸ்து இருக்கிறார். அவருடைய குடும்பத்திலுள்ள சகோதர, சகோதரி களாக நீங்கள் ஐக்கியங்கொண்டிருக்கிறீர்கள். சபை என்பது, கிறிஸ்துவின் சுய இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட கர்த்தருடைய சுதந்தரமாகும் (அப். 20:28). அது விசுவாசிகளாகிய உங்களுக்கு, ஆவிக்குரிய மறைவாகும். நீங்கள், சபையின் ஐக்கியத்திலே கூடிவரும்போது, உங்களுக்கு பெலனுண்டு, வல்லமையுண்டு, ஜீவனுண்டு. கர்த்தர் தம்முடைய கல்வாரி தியாகம், இரத்தம், மரணம், உயிர்த் தெழுதல் மூலமாக உங்களை மீட்டெடுத்து, சபையின் மறைவுக்குள்ளே கொண்டு வந்திருக்கிறார்.

இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக் கொண்டு வந்தார் (அப். 2:47). சபையிலே விசுவாசிகளுக்குப் பாதுகாப்பும், ஆதர வும் இருக்கும்படி அப்போஸ்தலர்களை, மேப்பர்களை, சுவிசேஷகர்களை, தீர்க்க தரிசிகளை, போதகர்களை கர்த்தர் ஏற்படுத்தியிருக்கிறார். சபை கூடி வருவதும், ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரை தொழுதுகொள்வதும், கர்த்தரிடத்தி லிருந்து அற்புதங்களையும், அதிசயங்களையும் பெற்றுக்கொள்வதும் எத்தனை பாக்கியமான அநுபவம்! சபையிலே ஒருவருக்கொருவர் ஜெபிக்கிறார்கள். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கிறார்கள். ஒரு விசுவாசி விழும்போது, மற்ற விசுவாசிகள் தூக்கி நிலைநிறுத்துகிறார்கள். ஒருவருக்கொருவர் பாதுகாப்புண்டு.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆலயத்திற்குச் சேன்று, கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் ஆராதியுங்கள். சபை கூடி வருவதும், ஆராதிப்பதும், கிறிஸ்தவ வாழ்க்கையின் அத்தியாவசியமாகும். கர்த்தருக்கென்று சாலொமோன் ஆலயத்தை கட்டியபோது, கர்த்தர் வாக்களித்து, "இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்" (2 நாளா. 7:15) என்றார்.

இயேசு கிறிஸ்து சேத அற்புதங்களில், பெரும்பாலான அற்புதங்கள் தேவால யத்தில் நடந்தவைகளாகும். ஒரு சகோதரி எப்பொழுதும் ஆலயத்திற்கு, பிந்தி, பிந்தி வந்து, அவர்களுடைய பிரச்சனைகளையும், போராட்டங்களையும் மட்டுமே, சோல்லி அழுதுகொண்டிருப்பார்கள். ஒருநாள், கர்த்தர் அவர்களோடு பேசினார். "நான் ஆலயத்தின் ஆரம்ப நேரத்திலே, என் தூதர்களோடு கெம்பீரமா வந்துவிடுவேன். பெதஸ்தா குளத்தில் இறங்கி, கலக்கி சுகமளிக்கும் கிருபையை வெளிப்படுத்துகிற தேவதூதன் முன்னதாகவே வந்துவிடுவான். நீ ஆராதனைக்கு முன்னதாகவே வந்து, அற்புத சுகத்தைப் பெற்றுக்கொள்" என்று பேசினார்.

தேவபிள்ளைகளே, உன்னதமானவரின் மறைவிலிருக்கிற சபைக்கு நீங்கள் காலம் தாழ்த்தாமல், சீக்கிரமா வந்து ஆராதனையிலே கலந்து கொண்டு களி கூருங்கள். கர்த்தர், உங்கள் மத்தியிலே நிச்சயமா உலாவி வருவார். அவர், துதி களின் மத்தியிலே வாசம் பண்ணுகிறவர். இப்போதும், அவருடைய அன்பின் சேட்டைகள் உங்களை மூடியிருக்கிறது.

நினைவிற்கு:- "சபை சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டு விடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வரு கிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்" (எபி. 10:25).