கிருபையின் ஐசுவரியம்!

"கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங் காலங்களில் விளங்கச் செய்தார்" (எபே. 2:6).

"கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியம்" என்ற இந்த வார்த்தை, எவ்வளவு அருமையானது! கிறிஸ்து உங்கள்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை விளங்கச் செய்கிறார்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் சீனா மலையிலே, இஸ்ரவேலருக்குப் பிரமாணம் கொடுக்கப்பட்டது. அந்தப் பிரமாணத்தின் கற்பனைகள், கைக்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாயிருந்தன. அவற்றைக் கடைப்பிடித்து வாழுவதற்கு, போதுமான கிருபை கொடுக்கப்படவில்லை.

ஆனால் புதிய ஏற்பாட்டிலோ, கொல்கொதா மேட்டிலே புதிய பிரமாணத்தைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கச் சித்தமானார். தேவனிடத்தில் முழு இருதயத்தோடு அன்புகூரவும், தம்மைப் போல பிறரை நேசிக்கவும், இரண்டு புதிய பிரமாணங்களைக் கிறிஸ்து கொடுத்தார். மாத்திரமல்ல, அதைக் கைக்கொள்ளுவதற் குரிய கிருபையையும், உங்களுக்கு அளிக்கிறார்.

வேதம் சொல்லுகிறது: "நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின" (யோவான் 1:17). கர்த்தராகிய இயேசு, கிருபையில் பூரணராயிருக்கிறார். "அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்" (யோவான் 1:16).

நீங்கள் இரக்கத்தையும், கிருபையையும் கிறிஸ்து விடத்திலிருந்து ஏராளமாப் பெற்றுக் கொண்டேயிருக் கிறீர்கள். ஆகவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய தில்லை; பயப்பட வேண்டியதில்லை; கிருபை உங்களைத் தாங்குகிறது. கிறிஸ்து உங்களுக்காகப் பரிந்து பேசி, உங்களுடைய பலவீனங்களை மேற்கொள்ள, போதிய கிருபையைத் தந்தருளுகிறார்.

கிறிஸ்துவினுடைய பாடு மரணங்களைத் தியானிக்கும்போது, இந்தக் கிருபை உங்களுக்குள்ளே தொடர்ந்து பெருகிக்கொண்டேயிருக்கும். இந்தக் கிருபை உங்களிலே வெளிப்படுவதற்காக கிறிஸ்து தம்மைத்தாமே வெறுமையாக்கி, பாடுகளினாலே பூரணப்பட்டார். ஆகவே தேவபிள்ளைகளே, நீங்களும், பாடுகளிலே பொறுமையை இழந்துவிடாமல், கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்திற் குள் உங்களை ஒளித்துக் கொள்ளுங்கள். அப்பொழுது, கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நீங்கள் அனுபவிக்கிற அனைத்து பாடுகளும், பரலோக தேவனிடத் திலிருந்து உங்களுக்குக் கிருபையை பெற்றுத் தந்து கொண்டேயிருக்கும்.

ஆகையால்தான் அப். பேதுரு, "நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்" (2 பேதுரு 3:18) என்று குறிப்பிடுகிறார். தேவபிள்ளைகளே, கிருபையிலே வளர்ந்து பெருகு வீர்களா? கிருபையை பெற்றுக் கொள்வீர்களா? "ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!" (ரோமர் 11:33).

நினைவிற்கு:- "நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாப் பிரயாசப் பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவ கிருபையே அப்படிச் செய்தது" (1 கொரி. 15:10).