உடைந்த பாத்திரமா?

"செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்" (சங். 31:12).

கர்த்தர் நமது வாழ்க்கையை வனையும் பரம குயவன். உங்கள் வாழ்க்கை உடைந்து போன பாத்திரம் போல இருந்தாலும், தூக்கி எறிந்துவிடாமல், மறுபடியும் உருவாக்கும்படி கிருபையின் தருணங்களைத் தருகிறவர். "குயவன் கையில் களிமண் நான்; அனுதினம் நீர் வனைந்திடுமே" என்று ஜெபத்தோடு கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பாருங்கள்.

பாவமானது, உங்களுக்கும் தேவனுக்கும் இடையேயுள்ள உறவையும், குடும்ப சமாதானத்தையும் உடைக்கிறது. மன அமைதியைக் கெடுத்து, மனச்சாட்சியை வாதிக்கச் செய்து, சந்தோஷத்தை அகற்றுகிறது. கணவன் மனைவிக்குச் செய்கிற துரோகங்களும், மனைவி கணவனுக்குச் செய்கிற துரோகங்களும் பெரிய பிரச் சனைகளையும், பிரிவுகளையும், கண்ணீரையும் கொண்டு வருகின்றன.

ஆடுகளின் பின்னால் நடந்த தாவீதை, கர்த்தர் இஸ்ரவேலின் மேல் ராஜாவாக உயர்த்தினார். ஆனால், அந்தோ! தன் அரண்மனையின் உப்பரிக்கையிலே உலாவின அவர் கொடூரமான பாவத்தில் விழுந்தபோது, பாவம் அவருடைய இருதயத்தை உடைத்தது. நாத்தான் தீர்க்கதரிசி அவருடைய குற்றத்தை உணர்த்தியபோது, தாவீதினுடைய உள்ளம் உடைந்தது. அப்போது அவர் கண்ணீரோடு 51 ஆம் சங்கீதத்தை எழுதினது மட்டுமல்ல, தான் ஒரு உடைந்த பாத்திரம் என்றும், தன்னை மறுபடியும் கர்த்தர் எடுப்பித்துக் கட்டவேண்டும் என்றும் கண்ணீரோடு மன்றாடினார். "செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்" (சங். 31:12) என்று கதறி அழுது சொன்னார்.

தேவபிள்ளைகளே, பாவத்தில் விழுந்தால் விழுந்த இடத்திலேயே கிடக்கக் கூடாது. உடனே கண்ணீரோடு கர்த்தரண்டை திரும்பி விட வேண்டும். பாவங் களுக்காக மெய்மனஸ்தாபப்பட்டு சிலுவையை நோக்கிப் பார்த்து கதறுவீர்களா னால், உங்களுடைய எல்லா பாவங்களையும் மன்னித்து, எல்லா அநியாயங்களை யும் நீக்கி, உங்களை சுத்திகரிப்பதற்கு கர்த்தர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.

தாவீது கதறியபோது கர்த்தர் மன்னிக்கவில்லையா? பேதுரு இயேசுவை மறுதலித்து, சபித்து சத்தியம் பண்ணினதை எண்ணி கதறி அழுதபோது, மீண்டும் பேதுருவினுடைய வாழ்க்கையை வனைந்து உருவாக்கி, பிரதான அப்போஸ்தல னாக நிலைநிறுத்தவில்லையா? சிம்சோன் தன்னுடைய பாவங்களுக்காக வருந்தி, "ஒரு விசை என்னை நினைத்தருளும்" என்று கதறி அழுதபோது, சிம்சோன் இழந்த பெலனை கர்த்தர் திரும்ப தந்துவிடவில்லையா?

கெட்ட குமாரன் பன்றிகளின் நடுவே கிடந்து, தகப்பனுடைய அன்பை எண்ணி கண்ணீர் வடித்து, திரும்பி தகப்பனிடம் வந்தபோது, அந்த அன்புள்ள தகப்பன் மகனுக்கு எதிர்கொண்டு ஓடி அரவணைத்து, மறுபடியும் ஏற்றுக் கொள்ள வில்லையா?

தேவபிள்ளைகளே, நீங்கள் இன்றைக்கு எந்த நிலைமையிலிருந்தாலும், கர்த்தரண்டை திரும்பி வரும்போது, நிச்சயமாகவே கர்த்தர் இரக்கம் பாராட்டுவார். அவருடைய இரக்கங்களுக்கு முடிவேயில்லை. தமது மிகுந்த காருண்யத்தின்படி உங்களுக்கு மனதிரங்குவார். மீண்டும் உங்களை வனைந்து உருவாக்குவார்.

நினைவிற்கு:- "ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தா யென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக" (வெளி. 2:5).