அன்பு மூடும்!

"அன்பு திரளான பாவங்களை மூடும்" (1 பேதுரு 4:8).

"குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சோல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்து விடுகிறான்" (நீதி. 17:9) என்றும் "புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்" (நீதி. 11:13) என்றும் வேதம் சொல்லுகிறது.

பொதுவாக ஜனங்கள் குறைகளையும், குற்றங்களையும் காணும்போது, கண்களை மிகவும் பெரிதாக திறந்து காண்கிறார்கள். ஆனால் நேர்மைகளை காணும்போது, பாராட்ட மனமின்றி கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள். அநேகர் பிறருடைய கண்களிலிருக்கிற துரும்பைக்கூட பார்த்துக்கொண்டு நடக்கிறார்களேத் தவிர, தங்கள் கண்களிலுள்ள உத்திரத்தைக் காண்பதில்லை."நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?" என்று மத். 7:3-ல் வாசிக்கிறோம்.

சிலருடைய வாழ்க்கை குறை கூறுவதிலேயே முழுவதுமாக வீணாகப் போய்விடுகிறது. இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ்சுமத்தும் ஆவி சாத்தானிடத்திலிருந்தே வருகிறது (வெளி. 12:10). மனுஷனிடத்தில் குறைகளையும், குற்றங்களையும் காணும்போது, அதை மன்னித்து மறப்பது தெவீக சுபாவம். ஆனால் குறை கூறி சோல்லித் திரியும் போதோ, அது மனுஷனிடத்திலிருந்தும், தேவனிடத்திலிருந்தும் சாபத்தைக் கொண்டு வருகிறது. நோவா தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தபோது, அவன் மகனான காம் அதைக் கண்டு, அதைச் சரிசெய்வதை விடுத்து தன்னுடைய சகோதரர்களுக்கெல்லாம் அறிவித்துத் திரிந்தான். இதனால் அவனும், அவனுடைய சந்ததியும் சாபத்திற்குள்ளாக வேண்டியதாயிற்று.

ஆனால் நோவாவின் இன்னொரு மகனாகிய யாப்பேத், வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து தகப்பனை மூடினான். அது அவனுக்கு ஆசீர்வாதத்தை பெற்றுத் தந்தது. நோவா, யாப்பேத்தை "தேவன் திருப்தியாக்குவார்" என்று சோல்லி மனப்பூர்வமா ஆசீர்வதித்தார்.

யார் யார் குற்றங்களை மன்னித்து, மறந்து, அதை தெவீக அன்பினால் மூடுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாகவே தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். கிறிஸ்துவின் சுபாவமும் அதுதான் அல்லவா? கல்வாரிச் சிலுவையில், "பிதாவே, இவர்களுக்கு மன்னியும்" என்று சொல்லி, மற்றவர்களுடைய பாவத்தை தன்னுடைய அன்பின் இரத்தத்தினால் மூடினார் அல்லவா?

இன்றைக்கும்கூட கிறிஸ்து குற்றம் சேபவர்களை மன்னித்து குற்றங்களை மறந்து அவர்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார் (1 யோவா. 2:1). ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது, அவர்களை தோல் உடையினால் மூடின கர்த்தர், உங்களையும் தம்முடைய இரட்சிப்பின் வஸ்திரங்களால் மூடுகிறார்.

தேவபிள்ளைகளே, கிறிஸ்துவின் சுபாவம் உங்களில் உருவாகட்டும். தெய்வீக அன்பினால், நிறைந்து, அரவணைத்து, பாவத்தை மூடுவது என்பது கடினமானதாயிருந்தாலும் கர்த்தர் அந்த தெவீக சுபாவத்தை உங்களுக்குத் தந்தருளுவாராக.

நினைவிற்கு:- "அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்" (ஏசாயா 61:10).