அவருக்குப் பிரியம்!

"பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்" (நீதி.12:22).

"உண்மையாய் நடக்கிறவர்களோ கர்த்தருக்குப் பிரியம்". நீங்கள் உண்மையாய் நடக்கும்போது, கர்த்தர் சம்பூரணமான ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிந்தருளுவார். கர்த்தர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியினாலே, உங்களிடத்தில் உண்மையை அவர் எதிர்பார்க்கிறார்.

உண்மையுள்ள மனுஷன் பெறும் முதல் ஆசீர்வாதம் கர்த்தருடைய பிரியம் அவன் மேல் இருப்பதாகும். ஆசிரியர்கள், தங்களிடம் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள்மேலும் ஒரே மாதிரி கவனத்தை செலுத்தினாலும், நன்கு படிக்கும் மாணவர்களிடம் விசேஷமான அன்பும், பரிவும் அவர்களிடம் வெளிப்படும். அதைப்போலத்தான் ஆயிரக்கணக்கான விசுவாசிகளிருந்தாலும், ஊழியக்காரர்க ளிருந்தாலும் உண்மையுள்ளவர்கள்மேல் கர்த்தர் தனிப்பிரியம் வைக்கிறார். "கோடைகாலத்தில் உறைந்த மழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்க ளுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான்" (நீதி. 25:13) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

உண்மையுள்ளவர்கள் மேல் கர்த்தர் பிரியம் வைப்பது மட்டுமல்ல, அவர்களை சோந்த ஜனமாக அரவணைத்துக் கொள்ளுகிறார். "அவர்களை அழைத்துக்கொண்டு வருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சோல்லுகிறார்" (சகரி. 8:8). நீங்கள் கர்த்தருடைய ஜனங்கள் என்று அழைக்கப்பட வேண்டுமென்றால், அவருக்குப் பிரியமானவர்களா நடக்க வேண்டியது அவசியம்.

மட்டுமல்ல, உண்மையுள்ளவர்களை நீதிமான் என்று சாட்சி கொடுக்கிறார். "என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்" (எசேக். 18:9) அந்த நீதிமானைப் பார்த்து, "உண்மையா உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்து கொள்ளுவா" (ஓசியா 2:20) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உண்மையுள்ளவர்களை கர்த்தர் அநேகத்தின் மேல் அதிகாரியா உயர்த்துகிறார். "உண்மையுள்ளவர்கள் மனுப்புத்திரரில் குறைந் திருக்கிறார்கள்" (சங். 12:1). எனினும் உண்மையுள்ள தேவனுடைய பிள்ளைகளை கர்த்தர் பார்க்கும்போது, "கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்" (மத்.25:21) என்று சொல்லி உயர்த்துகிறார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்களாய் ஜீவிக்க விரும்பினால், உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் உண்மையுள்ளவர்களாயிருங்கள். உங்களுடைய வீட்டில், நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில், நீங்கள் செல்லுகிற சபையிலே உண்மையுள்ளவர்களாயிருங்கள். அப்பொழுது கர்த்தருடைய பிரியம் உங்கள்மேல் இருக்கும்.

நினைவிற்கு:- "வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சோந்தமாகக் கொடுப்பவர் யார்?" (லூக். 16:12).