Posts in அன்றன்றுள்ள அப்பம்
எல்லாம் கிருபையே!

"கர்த்தருடைய கிருபையோ, அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது" (சங். 103:17).

"மனிதன் கட்டிலை வாங்கலாம். ஆனால் தூக்கத்தை விலை கொடுத்து வாங்க முடியாது" என்பது பழமொழி. பெரிய, பெரிய பணக்காரர்களிடத்தில், "ஐயா எவ்வளவு பணம் சம்பாதித்து, பங்களா, கார் என்று, சேர்த்தாலும் என்ன பயன்? நிம்மதியில்லையே? இரவிலே தூக்கம் வரவில்லையே? உண்மையாய் என்னை நேசிக்க ஒருவருமில்லையே? சமாதானமில்லையே? சந்தோஷமில்லையே? நான் நம்பியிருந்தவர்களெல்லாம் என்னை கைவிட்டு விட்டார்களே. இந்த உலகத்திலே, யார் என்னை தேற்றுவார்?" என்ற வேதனைக் குரல்தான் கேட்கிறது.

Read More
புதிய காரியத்தை!

"இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்" (ஏசா. 43:18,19).

நம் ஆண்டவர், வழிகளைத் திறப்பதில் ஆச்சரியமானவர். எல்லாப் பக்கங்களிலும் கதவு அடைக்கப்பட்டிருக்கிற சூழ்நிலை ஏற்படும்போது, அவர், வனாந்தரத்திலே வழியைத் திறந்து தர வல்லமையுள்ளவர். அவர், தம்மை நம்புகிறவர்கள் மேல் பாராட்டுகிற தயவு இணையற்றது.

Read More
குறைவானது ஒழிந்துபோம்!

"நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்" (1 கொரி. 13:10).

தன் மகனது ஒளிமயமான எதிர்கால வாழ்க்கையை எதிர்பார்த்த அன்புத்தாய், அவனை கல்லூரிக்குப் படிக்க அனுப்பினார்கள். அங்கே, அவன் இரட்சிக்கப்பட்டான். ஒரு கூட்டத்தில் மிஷனெரி சவாலைக் கேட்டு, தன்னை வெளிதேசத்திலுள்ள காட்டுமிராண்டி மக்கள் மத்தியில் சென்று, ஊழியஞ் செய்ய ஒப்புக்கொடுத்தான். தன் தீர்மானத்தை தன் தாய்க்கு எழுதி, "அம்மா, கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது. உங்கள் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன்" என்று எழுதினான்!

Read More
நன்மையும், கிருபையும்!

"என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களா நிலைத்திருப்பேன்" (சங்.23:6).

உங்கள் வாழ்நாளெல்லாம் நன்மையும், கிருபையும் உங்களைத் தொடரும். வலது காலை எடுத்து வைக்கும்போது, நன்மை. இடது காலை எடுத்து வைக்கும்போது, கிருபை. என்றென்றும் நன்மையும், கிருபையும், உங்களை நிழல் போல தொடர்ந்து வருகிறது. ஒருமுறை, ஒரு தேவ ஊழியர் சோன்னார்: "நம் ஒவ்வொருவருக்கும், இரண்டு தேவதூதர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்தான், நமக்கு பிரதானமான தேவதூதர்கள்" என்றார். நான் ஆச்சரியத்தோடு, அவர் எந்த தேவதூதர்களை பற்றி சோல்லுகிறார் என்று கவனித்தேன். முடிவாக அவர் சோன்னார்: "ஒரு தேவ தூதனுடைய பெயர் நன்மை; அடுத்த தேவதூதனுடைய பெயர் கிருபை" என்றார். ஆம், ஜீவனுள்ள நாளெல்லாம், நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும்.

Read More
அதிசயத்தைச் செய்வேன்!

"இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்" (ஏசா. 29:14).

நம்முடைய தேவன் அதிசயங்களின் தேவன். அவர், ஆராந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறார் (யோபு 9:10). தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறதினாலும், அவர் உங்கள் பட்சத்திலிருக்கிறதினாலும், உங்கள் வாழ்க்கையெல்லாம் அனுதினமும் அதிசயத்தாலும், அற்புதங்களாலும் நிறைந்திருக்கும். நீங்களும், உங்களுடைய பிள்ளைகளும், இஸ்ரவேலின் தேவனாலே அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் விளங்குவீர்கள். அல்லேலூயா!

Read More
அதிசயத்தைக் காண்பீர்கள்!

"உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்" (மீகா. 7:15).

அனைத்து ஆசீர்வாதத்தின் கதவுகளும், உங்களுக்கு மூடப்பட்டதுபோல இருக்கிறதா? என்ன செய்வது என்று அறியாமல் அங்கலாக்கிறீர்களா? இன்றைக்கு கர்த்தர், "அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்" என்று வாக்களிக்கிறார். அவருடைய நாமம் அதிசயமானவர்!

Read More
ஏற்ற காலத்தில் ஆசீர்வாதம்!

"ஏற்றகாலத்திலே மழையைப் பெயப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெயும்" ( எசே. 34:26).

வறண்ட நிலத்திற்கு, மழை எத்தனை பெரிய ஆசீர்வாதம்! வாடிப்போன மரம், செடி, கொடிகளுக்கு மழையினால் எத்தனை பெரிய புத்துணர்ச்சி! அதுபோலவே, துயரமும், துன்பமும் நிறைந்த இந்த உலகத்தில், கிறிஸ்துவினுடைய பிரசன்னமும், அவருடைய தெவீக அன்பும் உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியானது! "ஆசீர்வாதமான மழை பெயும்" என்று கர்த்தர் சொல்லுகிறார்!

Read More
என்றைக்கும் ஆசீர்வாதம்!

"உமது அடியானின் வீடு என்றைக்கும் இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்" (1 நாளா. 17:27).

கர்த்தர், உங்களை ஆசீர்வதிக்கிறது மாத்திரமல்ல, உங்களுடைய வீட்டையும் ஆசீர்வதிக்கிறார். வீட்டின் பிள்ளைகளையும் ஆசீர்வதிக்கிறார். வீட்டின் பணிமூட்டுக்களையும் ஆசீர்வதிக்கிறார். மாத்திரமல்ல, அவர் உங்களோடு வந்து உங்களுடைய வீட்டில் தங்கியும் விடுகிறார். அன்றைக்கு இயேசு, சகேயுவினுடைய வீட்டை ஆசீர்வதிக்க விரும்பி, "சகேயுவே, நான், உன் வீட்டில் தங்க வேண்டுமென்று" கேட்டார். சகேயு, அப்படிப்பட்ட அன்பின் வார்த்தைகளை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஒருவேளை, அதற்கு முன்பு சகேயுவினுடைய வீட்டில், குடிகார நண்பர்கள், கேலியும், பரியாசமும் செய்கிற சிநேகிதர்கள், அரசாங்கத்திலுள்ள உயர்மட்ட அதிகாரிகள், எல்லாம் வந்து தங்கி இருந்திருக்கக்கூடும். ஆனால், இயேசு அந்த வீட்டிற்குள் வந்தபோதோ, நிலைமை முற்றிலும் மாறி விட்டது. "அன்றைக்கு, அந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது." ஒரு வீட்டுக்கு, கர்த்தர் தருகிற ஆசீர்வாதங்களில், பெரிய ஆசீர்வாதம் "இரட்சிப்பு" அல்லவா?

Read More
யோசேப்பின் ஆசீர்வாதங்கள்!

"யோசேப்பு கனிதரும் சேடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் சேடி; அதின் கொடிகள் சுவரின் மேல் படரும்" (ஆதி. 49:22).

ஆதியாகமமம் 49-ஆம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பார்த்தால், யாக்கோபு தன் குமாரரையெல்லாம் ஆசீர்வதிப்பதை காணலாம். அந்த ஆசீர்வாதங்கள் எல்லாவற்றிலும், யோசேப்பின் ஆசீர்வாதமே மிக அருமையானவைகள். உள்ளத்தை ஆழமாய் தொடக்கூடியவைகள். மட்டுமல்ல, அந்த ஆசீர்வாதங்கள் நித்திய பர்வதம் வரைக்கும் எட்டுகின்றன. "உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரின் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக" (ஆதி.49:26).

Read More
சீயோனின் ஆசீர்வாதங்கள்!

"வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக" (சங். 134:3).

"ஆசீர்வாதம்" என்ற சொல் எத்தனை இனிமையானது! எல்லாருக்கும் தாங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்ற எண்ணமுண்டு. பெற்றோரின் ஆசீர்வாதத்திற்காக பிள்ளைகள் ஏங்குகிறார்கள். ஆசிரியர்கள், பெரியவர்கள், மேன்மக்களுடைய ஆசீர்வாதத்திற்காக எதிர்பார்க்கிறார்கள். அதே நேரம், கர்த்தருடைய ஊழியக்காரரின் ஆசீர்வாதமும் உங்களுக்குத் தேவை.

Read More
தேவனுடைய வீட்டின் ஆசீர்வாதங்கள்!

"பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்" (சங். 65:4).

"கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்" என்று சொன்னபோது, தாவீதினுடைய உள்ளத்தில் பெரிய சந்தோஷம் உண்டானது. ஆம், அங்கே நான் திருப்தியாக போஷிக்கப்பட போகிறேன். தேவனை, ஆடிபாடி துதிக்கப் போகிறேன். அவருக்கு ஆராதனைச் செய்யப்போகிறேன். கன்மலையின் தேன் அங்கே உண்டு. பேரின்ப நதியினால் தாகம் தீர்க்கப்படுவேன் என்று சொல்லி, அவர் ஆனந்த பரவசமடைந்தார்.

Read More
சகலவிதமான ஆசீர்வாதங்கள்!

"அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" (எபே. 1:3).

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கெல்லாம், உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களே மேன்மையாய் இருந்தன. அவர்களுடைய ஆசீர்வாதம், ஆடுகள் மாடுகளின் பெருக்கத்திலும், திராட்சரசப் பெருக்கத்திலும், வயல்வெளியின் பெருக்கத்திலுமே இருந்தது. ஆனால், புதிய ஏற்பாட்டு தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கோ, ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் மிகமிக மேன்மையானவைகள்.

Read More
தேவ பயத்தின் ஆசீர்வாதம்!

"கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்" (சங். 128:1).

சங்கீதம் 128-ஐ, எப்போதும் திருமண வைபவத்தில் வாசிப்பதைக் காணலாம். புது வீடுகளுக்கு குடும்பத்தோடு செல்லும்போதும், போதகர்கள் இந்த சங்கீதத்தை வாசித்து, ஆசீர்வதித்து அனுப்புவார்கள். ஒரு நல்ல குடும்பத்திற்கு, தேவன் அருளும் ஆசீர்வாதமாக இந்த சங்கீதம் விளங்குகிறது.

Read More
ஆசீர்வதிக்கும் தேவன்!

"அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோ, தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்" (லூக். 24:50).

தம்முடைய ஜனங்களை ஆசீர்வதிப்பதைக் குறித்து, கர்த்தர் மிகவும் அன்பும் அக்கறையுமுடையவராயிருந்தார். இன்றும் அப்படியே இருக்கிறார். அவர், இந்த பூமியை விட்டு கடந்து போவதற்கு முன்பாகச் செய்த கடைசி கிரியை, "ஆசீர்வதித்ததுதான்." "அவர் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார்."

Read More
தாழ்மையின் மேன்மை!

"கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்" (சங். 138:6).

தாழ்மையின் ஆசீர்வாதங்களை, தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டீர்களென்றால், கர்த்தரிடத்திலிருந்து கிருபையை பெற்றுக்கொள்வீர்கள். தாழ்மையுள்ளவர்களை அவர் நோக்கிப் பார்க்கிறவர். மாத்திரமல்ல, தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையும் அளிக்கிறார்.

Read More
மிகுதியான ஆசீர்வாதம்!

"ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்" (லூக். 5:6).

மனுஷன் தானாக பிரயாசப்படும்போது, முயற்சி அதிகமாக இருந்தாலும் பலன் குறைவாக இருக்கிறது. அதே நேரம், கர்த்தருடைய கரம் குறுக்கிடும்போது, முயற்சி குறைவாக இருந்தாலும் பலன் அதிகமாக விளங்கும்! அந்த தேவன் தாமே, உங்களுடைய முயற்சிகளையெல்லாம் ஆசீர்வதித்து, உயர்த்துவார். உங்கள் அப்பத்தையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். கானாவூரின் கல்யாண வீட்டில் திராட்சரசம் குறைவுபட்டபோது, மனித முயற்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் கர்த்தருக்கு திராட்சரசத்தைக் கொண்டு வர, வெறும் தண்ணீரே போதுமானதாக இருந்தது. அந்த தேவன், தம்முடைய மகிமையான ஐசுவரியத்தின்படியே, உங்களுடைய குறைவுகளையெல்லாம் நிறைவாக்க, அவர் வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

Read More
ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்!

"என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" (மத்.25:34).

கர்த்தர் உங்களை எவ்வளவு அன்போடுகூட அழைக்கிறார் என்பதை, சற்று சிந்தித்துப் பாருங்கள். "பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே!" என்று, அவர் உங்களைக் கூப்பிடும்போது, உங்களுடைய உள்ளமெல்லாம் மகிழ்ந்து களிகூரும். உங்களுடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெறுமையாய், இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதற்காக மாத்திரம் அழைக்கப்படவில்லை. நித்தியமான ராஜ்யத்திற்கென்று அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை, மறந்து போய்விடக் கூடாது. அந்த ராஜ்யத்தை, கர்த்தர் உங்களுக்காகவே உலகம் உண்டானது முதல் ஆயத்தம்பண்ணியிருக்கிறார். ஆகவே தான் அப். பவுல், "அழைப்பின் மகிமையை" சிந்தித்து தியானித்துப் பார்த்துவிட்டு, "நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாய் இருங்கள்" என்று குறிப்பிடுகிறார் (எபே. 4:1-3).

Read More
பின்மாரிக்காக ஜெபியுங்கள்!

"பின்மாரி காலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்" (சகரி. 10:1).

கர்த்தர் தருகிற ஐந்தாவது ஜெபக்குறிப்பு இது. ஆவியின் மழையால், எழுப்புதல் உண்டாகிறது. எழுப்புதலால், ஜெபவீரர்கள் எழும்புகிறார்கள். ஜெபத் தீயும் பற்றி எரிகிறது. ஆகவே பின்மாரி காலத்து மழைக்காக வேண்டிக்கொள்ளுவது எவ்வளவு அவசியம்! இந்த கடைசி நாட்களில் ஆவியின் பின்மாரி மழையானது, வல்லமையான அற்புத செயல்களுடன் அபரிமிதமாய் ஊற்றப்பட ஊக்கமாய் ஜெபியுங்கள். ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களில் ஒரு முன்மாரி ஊற்றப்பட்டது. எழுப்புதலின் நதி கரைபுரண்டு ஓடினது. சீஷர்கள் ஜெபித்தபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. ஆயிரக்கணக்கில் மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள். பேதுரு வசனத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது,கேட்டுக்கொண்டிருந்த யாவர்மேலும் ஆவியான வர் இறங்கினார் (அப். 10:44).

Read More
ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்!

"சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக் கொண்டிருங்கள்" (எபே. 6:18).

வேதம் உங்களுக்கு கொடுக்கும் நான்காவது ஜெபக்குறிப்பு இது. ஆம், ஊழியர் களை, கர்த்தர் பாதுகாத்து கொள்ளும்படியாக ஊக்கமாக ஜெபியுங்கள். ஊழியத்தில் நிற்கிற அவர்கள், போர்க்களத்தில் நிற்பதைப்போல எதிரியின் தாக்குதலில் நிற்கிறார்கள். நோய்களை, வியாதிகளை, பில்லிசூனியங்களை, அசுத்தங்களை, மந்திரவாதிகளை அவர்கள் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது.

Read More
கர்த்தரின் ஆச்சரியம்!

"ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது" (எசா. 59:16).

கர்த்தரே ஆச்சரியப்பட்டாரென்றால், அது நமக்கு பெரிய ஆச்சரியமாயிருக்கிறது. தாஜ்மஹாலைப் பார்த்து, நாம் பிரமித்து ஆச்சரியப்படுகிறோம். எகிப்திலுள்ள பிரமிடுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. நேபுகாத்நேச்சார் கட்டின தொங்கு தோட்டம் அன்றைக்கு உள்ளவர்களை மகிழ்ச்சியாக்கியிருந்திருக்கும். ஆனால், பரலோக மகிமையிலே இருக்கிற கர்த்தரை, ஆச்சரியப்படுத்தக்கூடியவை ஒன்று மில்லை. ஆனாலும் அவர் ஜெபம் பண்ணுகிறவர்கள் ஒருவருமில்லை. விண்ணப்பம் பண்ணுகிறவர்கள் இல்லையென்று ஆச்சரியப்பட்டாராம் (ஏசா. 59:16).

Read More