Posts in அன்றன்றுள்ள அப்பம்
உங்கள் பொக்கிஷங்கள்!

"உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்" (மத். 6:21).

உலகத்தில் வாழ பணம் அவசியம். உலகப் பொருள்கள் அவசியம். பணம் சம்பாதிக்க, கஷ்டப்பட்டு உழைத்துதான் ஆகவேண்டும். அதில் சந்தேகமில்லை. ஏதேன் தோட்டத்திலும்கூட, கர்த்தர் ஆதாமுக்கு வேலையை வைத்திருந்தார். நிலத்தை பண்படுத்த வேண்டும். அதைக் காக்க வேண்டும். சோம்பேறிகளுக்கு ஆண்டவர் ஒன்றும் கொடுப்பதில்லை.

Read More
மேன்மைப்படுத்துவேன்!

"நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ர வேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்" (யோசு. 3:7).

எந்த மனுஷனையும் உயர்த்தவும், எந்த மனுஷரையும் மேன்மைப்படுத்தவும், கர்த்தரால் ஆகும். அவர் எளியவனை புழுதியிலிருந்து எடுத்து, உயர்த்தி, ராஜாக் களோடு அமரப்பண்ணுகிறவர். கீர்த்தியும், புகழும், மேன்மையும், அவரிடத்தி லிருந்து வருகிறது.

Read More
வாய்க்காதே போகும்!

"உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்" (ஏசா. 54:17).

இன்றைக்கு வெளி ஒன்று பேசி, உள் ஒன்று வஞ்சகமாய் நினைக்கிற காலங் களுக்குள் வந்திருக்கிறோம். முன்னால் நமக்கு உதவி செய்பவர்களைப்போல காட்டிக் கொண்டு, பின்னால் குழி வெட்டும் சதி கும்பலை சந்தித்து வருகிறோம். சின்ன பிரச்சனைக்காக, பெரிய தீங்கு செய்ய நினைக்கும் சூனியக்காரர்களையும், செய்வினை செய்கிறவர்களையும் கவனித்து வருகிறோம்.

Read More
கோடான கோடி மடங்கு!

"ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்" (ஆதி. 24:60).

ரெபெக்காள், முற்பிதாவாகிய ஈசாக்குக்கு மணவாட்டியாகப் போகிறாள். அந்த நேரத்தில், ரெபெக்காளை அவளுடைய குடும்பத்தினர் வாழ்த்தி, ஆசீர்வதிக்கும் போது, இரண்டு மடங்கு, ஐந்து மடங்கு, பத்து மடங்கு அல்ல, "கோடான கோடி" மடங்கு, என்று சொல்லி ஆசீர்வதிக்கிறதைப் பார்க்கிறோம்.

Read More
ஆயிரம் மடங்கு!

"நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும், ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே, உங்களை ஆசீர்வதிப்பாராக" (உ பா. 1:11).

இன்றைக்கு நீங்கள் இருக்கிறதைப் பார்க்கிலும், ஆயிரம் மடங்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரென்றால், அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! இரண்டு பேராய் சிருஷ்டிக்கப்பட்ட மனுக்குலம், இன்றைக்கு எழுநூறு கோடியை தாண்டியிருக்கிறது. இது எத்தனை மடங்கு என்று எண்ணிப்பாருங்கள். "இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியமானது" (எண். 24:1).

Read More
நிமிரப் பண்ணுவேன்!

"உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின, உங்கள் தேவனாகிய கர்த்தர்" (லேவி. 26:13).

இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமையாயிருந்தார்கள். எகிப்தியர் அவர்கள்மேல் தாங்க முடியாத சுமைகளைச் சுமத்தினார்கள். ஒவ்வொருநாளும் ஏராளமான செங்கல்களை அவர்கள் சுட வேண்டும். அதற்குப் போதுமான வைக்கோல் கொடுக்கவில்லை. எகிப்தின் ஆளோட்டிகள் அவர்களை கொடூரமாய் அடித்து, நிர்ப்பந்தித்து கடின வேலை வாங்கினார்கள். எந்த சுதந்திரமும், சுயாதீனமுமேயில்லாமல், அவர்கள் தலை குனிந்து நடந்தார்கள்.

Read More
நுகத்தை முறிப்பேன்!

"இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்" (நாகூம் 1:13).

சாத்தான், தேவ ஜனங்கள்மேல், பல நுகத்தடிகளை வைக்கப் பிரியப்படுகிறான். பாவ பழக்க வழக்கத்தை காட்டி, அடிமைப்படுத்த முனைகிறான். ஆனால் கர்த்தரோ, தம் பிள்ளைகளுக்கு ஆதரவாயிருந்து, பிசாசினால் வருகிற சகல கட்டுகளையும், அடிமைத்தனங்களையும் முறித்து, விடுதலையாக்குகிறார். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் 8:36).

Read More
அக்கினியில் நடக்கும்போது!

"நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை, உன்பேரில் பற்றாது" (ஏசா. 43:2).

முதலாவது, தண்ணீர். இரண்டாவது, அதைவிட அதிகமான பாடுகளான ஆறுகள். மூன்றாவது, சுட்டெரிக்கிற அக்கினி. "உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து, ஏதோ புதுமையென்று திகையாமல், அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்‌" (1 பேது. 4:12,13).

Read More
ஆறுகளைக் கடக்கும்போது!

"நீ ஆறுகளைக் கடக்கும்போது, அவைகள் உன்மேல் புரளுவதில்லை" (ஏசா. 43:2).

"நீ ஆறுகளைக் கடக்கமாட்டாய்," என்று வேதம் வாக்குப்பண்ணவில்லை. உங்களுக்கு உபத்திரவமே வராது என்று, வேதம் சொல்லவில்லை. ஆறுகளை கடக்க வேண்டியது வரும். பாடுகளின் வழியாய் செல்ல வேண்டியதும் வரும். நிந்தைகள், உபத்திரவங்கள் வழியாய், நீங்கள் கடந்துச் செல்ல வேண்டியது வரும். ஆனாலும், எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தர் உங்களோடிருந்து, உங்களுக்கு ஜெயத்தைத் தந்தருளுவார்.

Read More
உன்னோடுகூட!

"நீ தண்ணீர்களைக் கடக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன்" (ஏசா. 43:2).

கர்த்தருடைய எல்லா வாக்குத்தத்தங்களிலும், சிறந்த ஒரு உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் உண்டென்றால், அது "உன்னோடுகூட இருப்பேன்" என்பதுதான். ஆம், அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை. உங்களைக் கைவிடுவதுமில்லை. ஒன்றிரண்டு நாட்கள், வருடங்கள் மட்டுமல்ல, உலகத்தின் முடிவு பரியந்தமும், சகல நாட்களிலும், அவர் உங்களோடுகூட இருப்பார். அவருடைய பிரசன்னம் உங்களோடுகூட இருக்கும். அவருடைய சமுகம், எப்பொழுதும் உங்களுக்கு முன்பாகச் செல்லும்.

Read More
நிறைவாக்கும் தேவன்!

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி, உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள், மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி. 4:19).

இந்த உலகம், குறைவுள்ள ஒரு உலகம்தான். சிலருக்கு, சரீரத்திலே ஏதோ ஒரு குறை. சிலருக்கு போதிய ஞானமில்லாத குறை. சிலருக்கு வருமானம், சம்பளம் குறை. வேறு சிலருக்கு மனதில் ஆழமான குறைவுகள். சிலர், குறைவுகளை எண்ணி, எண்ணி சோர்ந்து போகிறார்கள். வேறு சிலரோ, கர்த்தரின் மகிமையின் ஐசுவரியத்தினால் தங்கள் குறைவுகளை, நிறைவாக்கிக் கொள்ளுகிறார்கள்.

Read More
இரட்டிப்பான நன்மை!

"இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்" (சகரி. 9:12).

தேவனுடைய பிள்ளைகளுக்கு, இரட்டிப்பான நன்மைகள், இரட்டிப்பான ஆசீர்வாதங்களுமுண்டு. உலகப்பிரகாரமாகவும் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். ஆவிக் குரியப் பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கிறார். இம்மைக்குரிய சகல நன்மைகளை அருளிச் செய்கிறார். அதே நேரம், மகிமைக்குரிய நித்திய ஜீவனையும் தந்தருளுகிறார்.

Read More
நன்மையானது!

"கர்த்தர் நன்னமையானதைத் தருவார்; நம்முடைய தேசமும், தன் பலனைக் கொடுக்கும்" (சங். 85:12).

நீங்கள், கடந்த காலத்தில் பல நன்மைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்க லாம். நன்மையானது நடந்துவிடாதா? என் பிரச்சனைக்கு ஒரு முடிவு உண்டாகாதா? எவ்வளவு காலம் நான் போராடிக் கொண்டேயிருப்பது என்று மனம் சோர்ந்து போனீர்களா? இன்றைக்கு கர்த்தர் உங்களுக்கு வாக்குக்கொடுத்து, ‘மகனே, மகளே, உனக்கு நன்மையானதை நான் தருவேன்" என்று சொல்லுகிறார். அவர் மனதுருக்கத்தின் தேவன். அன்புள்ள பரமப் பிதா. பிள்ளைகளுக்கு தகப்பன் இரங்குகிறதுபோல, கர்த்தர் உங்களுக்கு மனமிரங்குவார்.

Read More
சந்தோஷமாக மாறும்!

"மெய்யாகவே மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் அழுது புலம்புவீர்கள். உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்" (யோவா. 16:20).

Read More
முடிந்து போகும்!

"உன் துக்கநாட்கள் முடிந்துபோம்" (ஏசா. 60:20).

இதுவரையிலும் உங்களுடைய துக்க நாட்களும், மன வேதனையின் நாட்களும், இருளின் நாட்களும், உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கலாம். ஆனால், இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கைக்கு நேராய், கர்த்தர் தம்முடைய கரத்தை நீட்டுவதினால், இன்று முதல் உங்களுடைய துக்க நாட்களும், இருளின் நாட்களும் முடிந்துபோகும்.

Read More
சுமக்கிற ஆசாரியர்கள்!

" சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற, ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடி வருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும்" (யோசு 3:13).

Read More
பிதாவின் ஆவி!

"பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்" (மத். 10:20).

இயேசு கிறிஸ்து தன் சீஷர்களைப் பார்த்து, மிக அன்போடு சொன்ன ஆலோசனை யின் வார்த்தைகள்தான் இவைகள். "மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள், உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில், உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும், புறஜாதியாருக் கும் சாட்சியாக, என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டு போகப்படுவீர்கள்.

Read More
என்னுடைய ஆவி!

"பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (சகரி. 4:6).

"என்னுடைய ஆவியினாலேயே ஆகும்," என்றால் என்ன அர்த்தம்? மற்ற எந்தவிதத்திலும், ஆகவே ஆகாது. பணத்தினாலோ, செல்வத்தினாலோ, செல்வாக் கினாலோ ஆகாது. ஆவியானவரில் சார்ந்துகொள்ளும்போது, மனுஷரால் கூடாதவை களை, அவர் கைக்கூடி வரும்படிச் செய்வார்.

Read More
விசேஷித்த ஆவி!

"தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும், புத்தியும், விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப் பட்டது" (தானி. 5:12).

தானியேலுக்குள் கர்த்தர் வைத்திருந்த ஆவி, "மகா விசேஷ"மானது. அதை ராஜாவாகிய பெல்ஷாத்சார், தன்னுடைய தாயின் மூலம் அறிந்தார். "உம்முடைய ராஜ்யத்திலே, ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்குள், பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது. உம்முடைய பிதாவின் நாட்களில், வெளிச்சமும், விவேகமும், தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது" (தானி. 5:11). "தானியேலுக்குள், சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதை பொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும், புத்தியும், விசேஷித்த ஆவியுமுண்டு."

Read More