Posts in அன்றன்றுள்ள அப்பம்
புஸ்தகம்!

"ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது" (மல். 3:16).

சிங்காசனத்தில் வீற்றிருக்கிற தேவாதி தேவனுக்கு முன்பதாக விரிக்கப்பட்டிருக்கிற புத்தகங்கள் ஜீவபுஸ்தகம், ஞாபகபுஸ்தகம் ஆகும். "கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும், அவருடைய நாமத்தை தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது" (மல். 3:16).

Read More
வஸ்திரம்!

"யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்" (சக. 3:3).

வேதத்திலே, பலவகையான வஸ்திரங்களைக் குறித்து சொல்லப்படுகிறது. கலியாண வஸ்திரமுண்டு (மத். 22:11,12). மினுக்கான வஸ்திரமுண்டு (யாக். 2:3), இரட்சிப்பின் வஸ்திரங்களும், நீதியின் சால்வைகளுமுண்டு (ஏசா. 61:10).

Read More
அக்கினி!

"நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது" (ஏசா. 43:2).

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் எத்தனை அருமையானவைகள். கர்த்தர் எல்லாச் சூழ்நிலையிலும் உங்களோடிருப்பார். அக்கினியில் நடக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும் கலங்காதேயுங்கள். அக்கினியில் மூன்று வகை உண்டு. 1) மனிதனால் உண்டாக்கப்படும் அக்கினி. 2) சாத்தானால் உண்டாக்கப்படும் அக்கினி. 3) கர்த்தரிடத்திலிருந்து வருகிற அக்கினி.

Read More
கழுகு!

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்" (ஏசா. 40:31).

வேதத்திலே, கழுகுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. கழுகைக் குறித்து வாசிக்கும்போதெல்லாம், அங்கே கர்த்தர் ஆவிக்குரிய நல்ல பாடங்களை வைத் திருக்கிறதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அவைகளை தியானிப்போமா?

Read More
முப்புரி நூல்!

"ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே" (பிர. 4:10).

நட்பு ஏன் முக்கியமானது என்பதைக் குறித்து, ஞானி இங்கே அருமையான விளக்கம் தருகிறார். தனிமையாயிருப்பது ஆபத்தானது, வேதனையானது. ஆகவே தான் வேதம் சொல்லுகிறது, "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்" (பிர. 4:9). "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" (பிர. 4:12).

Read More
கன்மலை!

"நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்" (சங். 71:3).

தாவீது, "அப்பா, நீரே என்னுடைய கன்மலை, நான் எப்பொழுது வேண்டு மானாலும் ஓடி வந்தடையத்தக்க அருமையான கன்மலை" என்று சொல்லி, கர்த்தரைத் துதிக்கிறார். "எப்பொழுதும்" என்ற வார்த்தையைப் பாருங்கள்! அது ஒரு நாள், இரண்டு நாளல்ல. ஒரு மாதம், ஒரு வருஷமல்ல. அது நித்திய நித்தியமாய் தாங்கக்கூடிய அருமையான கன்மலை. அந்த கன்மலைதான் இயேசுகிறிஸ்து.

Read More
நதி!

"உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது" (சங். 36:8,9).

கர்த்தர் உங்களுடைய தாகத்தைத் தீர்க்கிறவர். வாஞ்சைகளை நிறைவேற்று கிறவர். நீங்கள் கர்த்தருக்கு முன்பாக உண்மையும், உத்தமமுமாய் நிற்கும்போது, உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களையெல்லாம் அவர் நிறைவேற்றுவார். வேதம் சொல்லுகிறது: "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருத யத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்" (சங். 37:4).

Read More
தெளிதேன்!

"தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது" (சங். 19:10).

தாவீது ராஜா வேதத்தை கையிலெடுக்கும்போதெல்லாம், தேன் பாட்டிலை மகிழ்ச்சியோடு எடுப்பதைப் போலத்தான் எடுத்தார். தேனைக் கையிலே ஊற்றி, நாக்கினால் ருசிக்கும்போது எவ்வளவு மதுரமாயிருக்கிறதோ, அதைவிட வேதம் தெளிதேனிலும் மதுரமானது.

Read More
சுவர்!

"உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது" (ஏசாயா 59:2).

சுவர் என்பது, சாத்தானால் எழுப்பப்படுவது, பாவங்களினால் எழுப்பப்படுவது மற்றும் கல்வாரி இரத்தத்தினாலும் அக்கினியினாலும் எழுப்பப்படுவது என மூன்று வகைப்படும்.

Read More
வேலி!

"நீர் அவனையும் அவன் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?" (யோபு 1:10).

தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிற அடைக்கலத்தை, நீங்கள் அறிந்திருக் கிறீர்களோ, இல்லையோ, சாத்தான் திட்டமும் தெளிவுமாய் அறிந்திருக்கிறான்.

Read More
வீடு!

"இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்" (2 சாமு. 7:29).

தேவபிள்ளைகளின் வீடு ஆசீர்வாதமாயிருக்கும். ஏனென்றால், அங்கே தேவனாகிய கர்த்தர் வாசம் பண்ணுகிறார். தேவபிள்ளைகள் அங்கே கர்த்தரைப் ஆடிப் பாடித் துதிக்கிறார்கள். ஆம், நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தமுண்டு.

Read More
முட்செடி!

"முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக" (உபா. 33:16).

மோசே கர்த்தருடைய நாமத்தைச் சொல்லும்போது, அவர் முட்சேடியில் எழுந் தருளியவர் என்று சொல்லிவிட்டு, அவருடைய தயை அவருடைய பிள்ளைகளின் தலைகளின்மேல் ஆசீர்வாதமாக வருகிறது என்று குறிப்பிட்டார்.

Read More
கானான்!

"வழியிலே உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும் இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்" (யாத். 23:20).

இஸ்ரவேலர்கள் அடிமைத்தனமாகிய எகிப்தை விட்டு, பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை நோக்கி பிரயாணம் செய்தார்கள். அவர்களை வழி நடத்த மேக ஸ்தம்பங்களும், அக்கினிஸ்தம்பங்களும் இறங்கி வந்தன. மட்டுமல்ல, வழியிலே அவர்களைக் காக்கிறதற்கும், கானான் தேசத்திலே கொண்டு போய் சேர்க்கிறதற்கும், ஒரு விசேஷமான தூதன் முன்னால் சென்று கொண்டேயிருந்தான்.

Read More
புல் பூண்டு!

"பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்" (ஆதி. 1:11).

வெறுமையும், ஒழுங்கின்மையுமாய் கிடந்த இந்த பூமியைக் கர்த்தர் சீர்ப்படுத்த சித்தமானபோது, அழகிய மரங்களை முளைக்கச் செய்து, கனிதரும் விருட்சங் களை உண்டாக்கி, நம்மேல் வைத்த கர்த்தருடைய கிருபை எத்தனை பெரியது!

Read More
ஆகாய விரிவு!

"ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்" (ஆதி. 1:6).

நம்முடைய உள்ளம் நீல நிறமான ஆகாய விரிவைப் பார்க்கும்போது, மகிழ்ந்து, களிகூர்ந்து துள்ளுகிறது. "ஆகாய விரிவு" என்பது, உன்னதமான ஆவிக்குரிய ஜீவியத்தைக் குறிக்கிறது. ஆகாயத்தைப் பார்க்கும்போது, மேகஸ்தம்பங்களோடு இஸ்ரவேலருக்கு முன் நடந்த தேவனை நாம் நினைவுகூருகிறோம்.

Read More
சுடர்கள்!

"ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது என்றார்" (ஆதி. 1:14).

தேவன், நான்காம் நாள் ஆகாய விரிவிலே சுடர்களை சிருஷ்டித்தார். வெறுமை யான ஆகாய விரிவு, சிருஷ்டி கர்த்தரின் கரத்தினால் அழகாக அலங்கரிக்கப்பட்டது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்களெல்லாம் ஆகாய விரிவை அழகு செய்தன.

Read More
பெரியவர்!

"பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்" (1 யோவா. 4:4).

கர்த்தர் உங்களுக்குள்ளே பெரியவராய், வல்லமையுள்ளவராய், மகிமையுள்ளவராய், மகத்துவமுள்ளவராயிருக்கிறார். இந்த உலகத்தில், அதின் அதிபதியாகிய பிசாசு இருக்கிறான். ஆகவே, அவன் தேவனுடைய பிள்ளைகளுக்குப் பாடுகளையும், உபத்திரவங்களையும், தொல்லைகளையும் கொண்டு வருகிறான். இயேசு சொன்னார்: "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவா. 16:33).

Read More
விசாரிப்பவர்!

"அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை யெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" (1 பேதுரு 5:7).

கர்த்தருடைய குணாதிசயங்களில் ஒன்று, "விசாரிக்கிறவர்" என்பதாகும். உங்களை யாராவது பாசத்தோடு விசாரிக்கும்போது, உங்கள் உள்ளமெல்லாம் குளிர்ந்து விடுகிறது. நீங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு சென்றால், உற்றார், உறவினர்கள் உங்களை விசாரிக்கும்போது, உங்களுடைய உள்ளம் மகிழுகிறது.

Read More
நிறைவாக்குபவர்!

"என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி. 4:19).

மகிமையில் ஐசுவரியமுள்ள தேவன் உங்களுடைய குறைவுகளையெல்லாம் மாற்றி நிறைவாக்குவார். சிங்கக்குட்டிகள்கூட ஒருவேளை தாழ்ச்சியடைந்து பட்டினியாய் இருக்கலாம். ஆனால், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.

Read More
உலாவுபவர்!

"நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்" (2 கொரி. 6:16).

கர்த்தர் உங்களுக்குள் உலாவுகிறவர். அவர் உங்களுக்குள் உலாவும்போது, அவருடைய பிரசன்னம் எவ்வளவு அதிகமாயிருக்கும்! அவர் உங்களுக்குள்ளிருந்தால் கர்த்தருடைய சமூகத்துக்கும், பிரசன்னத்திற்கும் குறைவேயிருக்காது.

Read More