Posts in அன்றன்றுள்ள அப்பம்
நம்பிக்கை என்ன?

"நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?" (ஏசா. 36:4).

உங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? இந்த பூமியிலே வாழும்போது, உங்களுடைய நம்பிக்கை என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Read More
கசப்பான கனிகளா?

"அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?" (ஏசா. 5:4).

ஏசாயா 5-ம் அதிகாரத்திலே தீர்க்கதரிசி, "கர்த்தருக்கு செழிப்பான மேட்டிலே இருந்த ஒரு திராட்சத்தோட்டத்தைப் பற்றிய பாடல்" ஒன்றைப் பாடுகிறார். கர்த்தர் அந்த தோட்டத்துக்கு வேலியடைத்து, கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்ச செடிகளை நட்டு, அதின் நடுவிலே ஒரு கோபுரத்தையும் கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல பழங்களைத் தரும் என்று காத்திருந்தார். ஆனால், அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

Read More
என்ன வந்தது?

"மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக் குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?" (சங். 114:6).

மலைகள் ஆட்டுக்கடாக்களைப் போலவும், குன்றுகள் ஆட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளுகிறதற்கு என்ன வந்தது என்று ஆச்சரியத்தோடு தாவீது பார்க் கிறார். ஆம், கர்த்தர் உள்ளத்தில் வந்தார். துதியின் மகிழ்ச்சி ஆத்துமாவில் வந்தது. பரிசுத்த ஆவியின் நிறைவு இருதயத்தை பொங்கப் பண்ணியது. குன்றுகள் ஆட்டுக்குட்டியைப் போல துள்ளாமல், வேறு என்ன செய்யமுடியும்.

Read More
உடைந்த பாத்திரமா?

"செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்" (சங். 31:12).

கர்த்தர் நமது வாழ்க்கையை வனையும் பரம குயவன். உங்கள் வாழ்க்கை உடைந்து போன பாத்திரம் போல இருந்தாலும், தூக்கி எறிந்துவிடாமல், மறுபடியும் உருவாக்கும்படி கிருபையின் தருணங்களைத் தருகிறவர். "குயவன் கையில் களிமண் நான்; அனுதினம் நீர் வனைந்திடுமே" என்று ஜெபத்தோடு கர்த்தருடைய முகத்தை நோக்கிப் பாருங்கள்.

Read More
எங்கே விழுந்தது?

"தேவனுடைய மனுஷன், அது எங்கே விழுந்தது என்று கேட்டான்" (2 இராஜா. 6:6).

யோர்தான் நதியின் ஆழமான பகுதிக்குள்ளே கோடரியின் இரும்புப் பகுதி பெயர்ந்து விழுந்தபோது, தேவனுடைய மனுஷன், "அது எங்கே விழுந்தது?" என்று கேட்டான்.

Read More
என்ன இருக்கிறது?

"நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது?" (2 இராஜா. 4:2).

மரித்துப்போன ஒரு தீர்க்கதரிசியின் மனைவி, தன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும்படி தேவ மனுஷனாகிய எலிசாவினிடத்தில் வந்தாள். கடன் சுமை அதிகமாயிருந்தது. அவளுக்கு உதவி செய்ய யாருமில்லை. கடன் கொடுத்தவன் பிள்ளைகளை அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான். அந்த இக்கட்டான வேளையில் தேவ மனுஷன் அவளைப் பார்த்து, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும், உன்னிடத்தில் என்ன இருக்கிறது, என்று கேட்டார்.

Read More
மனச்சோர்பா?

"போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்" (1 இராஜா. 19:4).

பெரிய ஊழியக்காரனாகிய எலியா செய்த ஜெபத்தைக் கவனித்துப் பாருங்கள். மனச்சோர்பு எவ்வளவு பெரிய ஊழியரையும் விடுவதில்லை. சோர்பு உங்களை மேற்கொள்ள முடியாதபடி திடமான இருதயத்தைக் கர்த்தரிடத்தில் கேளுங்கள்.

Read More
போராட்டமா?

"நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்" (யோசுவா 1:3).

நீங்கள் போராட்டத்தின் பாதையிலே, கடந்து செல்லுவீர்களென்றால், யோசுவா வின் புத்தகத்தை, ஆவியானவரின் துணையோடு வாசித்துப் பாருங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு விடுதலையையும், வெற்றியையும் தந்தருளுவார்.

Read More
ஏன் உபத்திரவம்?

"அவர் உன்னை சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்" (உபா. 8:3).

ஒவ்வொரு காரியத்திலும் கர்த்தருக்கு ஒரு நோக்கமுண்டு. ஒவ்வொரு பாடுக்குப் பின்பாகவும் ஒரு பாக்கியமுண்டு. உபத்திரவங்களுக்குப் பின்பாக ஒரு மேன்மையுண்டு. சிலுவைக்குப் பின்பாக ஒரு சிங்காசனமுண்டு. கிறிஸ்துவோடு பாடு அனுபவிக்கிறவர்கள், நிச்சயமாக அவரோடு மகிமையுமடைவார்கள்.

Read More
சத்துருக்களா?

"உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்" (லேவி. 26:7).

உங்களை காரணமில்லாமல் பகைக்கிறவர்களும், அநியாயமாய் உங்களுக்கு விரோதமாய் எழும்புகிற சத்துருக்களும் ஏராளமுண்டு. இந்த உலகத்தில் பொறாமை இருக்கிறவரையிலும், பொறாமையை ஜனங்கள் உள்ளத்திலே ஊட்டுகிற சாத்தான் இருக்கிற வரையிலும், சத்துருக்கள் எழும்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.

Read More
கசப்புகளா?

"கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று" (யாத். 15:25).

கர்த்தர் மாராவின் கசப்பை மதுரமாக்குகிறவர். துக்கத்தை சந்தோஷமாய் மாற்றுகிறவர். கண்ணீரை ஆனந்தக் களிப்பாய் மாற்றுகிறவர். அந்த கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார்.

Read More
அற்பமோ?

"லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்" (ஆதி. 29:31).

இந்த உலகத்திலே நீங்கள் இரண்டு விதக் கூட்டத்தாரை காணலாம். ஒன்று, மற்றவர்களை மிகவும் அற்பமாய் எண்ணுகிறவர்கள். அடுத்தது, தன்னைத்தானே அற்பமாய் எண்ணி ஒடுங்கி வாழுகிறவர்கள். சிலர், படிப்பறிவு இல்லாததினால் அற்பமாய் எண்ணப்படுகிறார்கள். சிலர், அழகில்லாததினால் அற்பமாய் எண்ணப் படுகிறார்கள். சிலர், அந்தஸ்தில் குறைவுள்ளதினாலும், ஏழையாய்ப் பிறந்ததி னாலும், ஜாதி பிரிவினையினாலும் அற்பமாய் எண்ணப்படுகிறார்கள்.

Read More
எப்படி நடப்பது?

"நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்" (ஆதி. 13:17).

ஒரு மனிதனுடைய நடைகளைக் கொண்டு, அவனுடைய குணாதிசயத்தை சொல்லி விடலாம். சிலருடைய நடைகள் தளர்ந்துபோன, சோர்ந்து போன நடைகள். சிலருடைய நடைகள் உற்சாகமான, விறுவிறுப்பான நடைகள். சிலருடைய நடைகள் வீரனுடைய நடைகள். சாதுவின் நடையுமுண்டு, ராஜகெம்பீரமான நடையுமுண்டு, உழைப்பாளியின் நடையுமுண்டு.

Read More
காவலாளியோ?

"என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்" (ஆதி. 4:9).

மனுஷன் தேவனைப் பார்த்து கேட்ட முதல்கேள்வி, "நான் காவலாளியோ?" என்பதுதான். அதற்கு கர்த்தர், "மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத் தாருக்குக் காவலாளனாக வைத்தேன்" (எசே. 3:17) என்றார். ஆம், நீங்கள் காவலாளிகள்தான். கர்த்தர் உங்களை காவலாளிகளா வைத்திருக்கிறார்.

Read More
சோதனையா?

"நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை" (2 கொரி. 4:8).

உங்களுக்கு நெருக்கம் வரும்போது, நீங்கள் ஒடுங்கிப்போவதில்லை. கலக்கங்கள் வரும்போது, மனமுறிவடைகிறதில்லை. சோதனை வரும்போது, சோர்ந்து போவதில்லை. உங்களுக்குப் பாடுகளும், உபத்திரவங்களும் வரத்தான் செய்யும். இயேசு சொன்னார், "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33).

Read More
அன்பாயிருக்கிறாயா?

"யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" (யோவா. 21:15).

கர்த்தர் உங்களிடத்தில் முழு அன்பையும் எதிர்பார்க்கிறார். ஏனென்றால், நீங்கள் அவரை நேசிப்பதற்கு முன்பாகவே, அவர் தம்முடைய முழு அன்பையும் உங்கள்மேல் ஊற்றிவிட்டார்.

Read More
தனிமையா?

"நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்" (யோவா. 14:18).

தனிமை வேதனையானது. இயேசுவைத் தவிர உங்கள் தனிமையை நீக்குகிறவர் வேறு ஒருவருமில்லை. அவர் தாயைப்போல தேற்றுகிறவர், சிநேகிதனைப்போல உங்களோடு பேசுகிறவர், தகப்பனைப்போல அரவணைத்துக் கொள்ளுகிறவர். மட்டுமல்ல, பரிசுத்த ஆவியானவரையும் உங்களுக்குத் தேற்றரவாளனாய் தந்து உங்களுக்குத் துணை நிற்கிறவர். தம்முடைய சீஷர்களுக்கு அவர் சிநேகிதனாயிருந்தது மட்டுமல்ல, ஆவியானவரையும் சிநேகிதனாக வாக்குப்பண்ணினார். "நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்" என்றார் (யோவா. 15:15).

Read More
பின் செல்லுவாயா?

"ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது" (யோவா. 10:4).

"என்னைப் பின்பற்றி வா" என்று அழைக்கிறவர், உங்களுக்கு முன்னே செல்லுகிறார். உங்களுக்கு வழிகாட்டுகிறார். கோணலானவைகளை அகற்றுகிறார். தடைகளை நீக்குகிறார். நல்ல மேப்பன் முன் செல்லும்போது, ஆடுகள் உற்சாக மாய் பின்னே செல்லுகின்றன.

Read More
விரும்புகிறாயா?

"சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்" (யோவான் 5:6).

கர்த்தர் சகல ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றுக்காரணர். சகல நன்மைகளையும் தர விரும்புகிறவர். சுகமும், ஆரோக்கியமும் கர்த்தரிடத்திலிருந்துதான் கிடைக்கின் றன. ஆனால் அவர் உங்களைப் பார்த்து, "நீ விரும்புகிறாயா?" என்று கேட்கிறார்.

Read More
சுமையா?

"சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொட மாட்டார்கள்" (மத். 23:4).

"தோள்கள்" என்றால் சுமைகளை, பொறுப்புகளை, பாரங்களை சுமப்பதற்காகவே உருவாக்கப்பட்ட அவயவம் என்று பலரும் எண்ணிக்கொள்ளுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் நாட்களிலே, ரோம அரசாங்கத்து போர்வீரர்கள் பெரிய பெரிய சுமைகளை யூதர்கள் தோள்களிலே சுமத்தி, அதைக் கொண்டு செல்லும்படி வற்புறுத்தினார்கள். காரணம், யூதர்கள் ரோமருக்கு அடிமைகளாயிருந்தார்கள். அந்த சுமைகளை சுமந்தவர்கள் மகிழ்ச்சியோடு அதை சுமக்கவில்லை. முறுமுறுத்துக் கொண்டே சுமந்தார்கள்.

Read More